ஆன்லைனில் முதலீட்டில் ஏகப்பட்ட லாபமா? யோசிக்காம இந்த கும்பலிடம் மாட்டிக்காதீங்க..

பவர் பேங்க் (Power Bank app), டெஸ்லா பவர் பேங்க் Tesla Power Bank app), ஈஸ்ப்ளான் (Ezplan) என மூன்று அப்ளிகேஷன்கள் மூலம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

These 3 Android investment apps cheated users of Rs 150 crore, ED attaches assets worth Rs 59 crore sgb

பவர் பேங்க் அப்ளிகேஷன் மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை இயக்குனரகம் வைபவ் தீபக் ஷா, சாகர் டயமண்ட்ஸ் ஆகியோரின் ரூ.59.44 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கியுள்ளது. RHC குளோபல் எக்ஸ்போர்ட்ஸ் என்ற போலி நிறுவனத்தை நடத்திவந்த அவர்களது கூட்டாளிகளையும் பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA), 2002 இன் கீழ் கைது செய்துள்ளது.

உத்தரகாண்ட் போலீசார், டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் மற்றும் கர்நாடகா போலீசார் பதிவு செய்த பல்வேறு எஃப்ஐஆர்களின் அடிப்படையில் விசாரணையை தொடங்கியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ஜூன் 2021 இல், கூகுள் ப்ளே ஸ்டோரில் போலி செயலியைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி ரூ.150 கோடி பணத்தைச் சுருட்டியதாக டெல்லி போலீஸ் சைபர் க்ரைம் பிரிவு பலரைக் கைது செய்தது. போலி செயலியில் செய்யும் முதலீடுகளுக்கு கவர்ச்சிகரமான வட்டிவிகிதத்தில் பெரிய லாபம் கிடைக்கும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

கூகுள் தேடலில் புதிய AI ஆப்ஷன்! மைக்ரோசாப்ட் பிங் ஐடியாவை காப்பி அடித்த கூகுள்!

These 3 Android investment apps cheated users of Rs 150 crore, ED attaches assets worth Rs 59 crore sgb

முதலீட்டுத் தொகையில் 5 முதல் 10 சதவீதம் லாபம் கிடைக்கும் என்று நம்ப வைத்து முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளனர்.  மோசடி பேர்வழிகள் முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தைப் பெற்றவுடன் அமைதியாகிவிடுவார்கள். அப்ளிகேஷனிலும் முதலீடு செய்தவர்களின் பயனர் கணக்குகளை முடக்கிவிடுவார்கள்.

பவர் பேங்க் (Power Bank app), டெஸ்லா பவர் பேங்க் Tesla Power Bank app), ஈஸ்ப்ளான் (Ezplan) என மூன்று அப்ளிகேஷன்களை கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் பிற போன்ற டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்களில் வெளியிட்டு அதன் மூலம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என அமலாக்கத்துறை கூறுகிறது.

இந்திய மக்களை ஏமாற்றும் நோக்கில் ஒரு சில சீனர்கள் இந்தியாவில் பல ஷெல் நிறுவனங்களை உருவாக்கியுள்ளனர் என்றும் இது அவர்களின் பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கலாம் என்றும் அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னதாக, இந்த வழக்கு தொடர்பான சோதனையின் போது, 10.34 கோடி ரூபாய் மதிப்பிலான கரன்சிகள் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 14.81 கோடி ரூபாய் இருப்பு வைத்திருந்த வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

2022ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4.92 கோடி ரூபாயை முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மூன்று பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

ஹமாஸ் பயங்கரவாதிகளின் துப்பாக்கி முனையில் கதறி அழும் குழந்தைகள்! நெஞ்சை உலுக்கும் காட்சிகள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios