வாட்ஸ் ஆப் : அனுப்பிய  மெசேஜில் மாற்ற / டெலிட் செய்ய  புதிய  வசதி...!!!

there is-a-chance-to-change-or-delete-in-wats-app


வாட்ஸ் ஆப் : அனுப்பிய  மெசேஜில் மாற்ற / டெலிட் செய்ய  புதிய  வசதி...!!!

வாட்ஸ் ஆப்பின் பயன்பாடு  எந்த அளவுக்கு இன்றைய காலகட்டத்துல  தேவை என்பது நம் அனைவருக்கும் தெரியும்......

இன்றைய தினத்தில் வாட்ஸ் அப் பயன்படுத்தாதவர்கள்  யாரும்  இல்லை  என கூற முடியும். அதே சமயத்தில்,  வாட்ஸ்  ஆப்  பயன்படுத்தும் போது,  அதில் பல  குரூப்களில்  நாம்  இருக்கிறோம்.

நாம்  குரூப்பில்  இருக்கும் போது,  தெரியாதவிதமாக   தேவை இல்லாத  மெசேஜ்  பார்வார்ட்  ஆகி இருக்கும்.......இதனால்   அந்த குரூப்பில் உள்ளவர்கள்  அனைவரும் அந்த  மெசேஜ்  பார்க்க  இயலும் , இதனால் பல  நேரங்களில்  பல  சங்கடங்களுக்கு  ஆளாக   நேரிட  வேண்டியுள்ளது.

சில  சமயத்தில் குறிப்பிட்ட   நபருக்கு  அனுபுவதற்கு   பதிலாக,  தவறுதலாக  வேறு யாருக்காவது  சம்பந்தம்  இல்லாமல்  அனுப்பி  இருப்போம்

இந்நிலையில் தற்போது,  இவை அனைத்திற்கும் முற்று புள்ளி வைக்கும் விதமாக ,  நாம்  வாட்ஸ் ஆப் பில் அனுப்பிய மெசேஜில் மாற்றம்   செய்யவும்,  அல்லது  அந்த  மெசேஜ்   டெலிட் செய்ய வேண்டும்   என்று நினைத்தாலோ  உடனே டெலிட் செய்ய முடியும் என்பது குறிபிடத்தக்கது.

டெலிட் செய்தால்,  நாம்  யாருக்கு  அந்த  மெசேஜை  அனுப்பினோமோ , அவர்கள்  வாட்ஸ்  அப்பில்  கூட அந்த  மெசேஜ்  டெலிட்  ஆகி இருக்கும்......

அதாவது,  குறிப்பிட்ட மெசேஜை செலெக்ட் செய்யும் போது ரிவோக், ஸ்டார், ரிப்ளை, ஃபார்வேட், டெலிட் ஆகிய ஆப்ஷன்கள் தோன்றும். இவற்றில் ரிவோக் என்ற ஆப்ஷன் மூலம் மெசேஜை மாற்றிவிடமுடியும்....

இந்த  வசதி   தற்போது சோதனைக்காக, ஐபோனுக்கான வாட்ஸ் ஆப்பில்  மட்டும்   பயன்படுத்த  முடியும் வகையில் உள்ளது. ...

தொடர்ந்து,  மிக   விரைவில்  இந்த  வசதி   முளுபயன்பாட்டுக்கு  வரும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios