கிரடிட், டெபிட் கார்டு தேவைப்படாது , பிறந்தது ‘மாற்று வழி” - நிதி ஆயோக் சிஇஓ கருத்து..!
கிரடிட், டெபிட் கார்டு தேவைப்படாது , பிறந்தது ‘மாற்று வழி” - நிதி ஆயோக் சிஇஓ கருத்து..!
கருப்பு பணம் ஒழிக்கும் நடவடிக்கையாக 5௦௦ மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்பு, மொபைல் போன் மூலமாக , எளிதான முறையில் பண பரிவர்த்தனை செய்வதற்கு ஏதுவாக சென்ற மாதம் `பாரத் இண்டர் பேஸ் பார் மணி (பீம்) செயலியை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்தார்.
இதன் மூலம் நடுத்தர மக்கள் கூட எளிமையான முறையில், பண பரிவர்தனை செய்ய முடியும் என்பது குறிபிடத்தக்கது. மேலும், பீம் செயலியுடன் தற்போது யுபிஐ பின் நம்பரும் ( unified payment interface ) பதிவு செய்து மிக எளிய முறையில் இனி பரிவர்த்தனை செய்யலாம்.
ஏன் கிரடிட், டெபிட் கார்டு தேவை குறையும் ?
மொபைல் போன் மூலம் செயலியை பயன்படுத்தி, பண பரிவர்த்தனை செய்வது நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்து வருவதால், வரும் 2020 ஆம் ஆண்டுக்குள், கிரடிட், டெபிட் கார்டு தேவை குறையும் என நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.