மின்சாரமே தேவையில்லை - மரத்தால் ஆன டிரெட்மில் உருவாக்கி அசத்திய இந்தியர்

இறுதியில் மரத்தால் ஆன டிரெட்மில்லை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை விளக்குவதோடு, செயல் விளக்கமும் அளித்து இருக்கிறார். 

Telangana Man Creates Wooden Treadmill That Works Without Power, Earns Praise Online

நவீன உலகில் புதுமைக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கத் தான் செய்கிறது. உலக மக்களை புதுவித யோசனைகளால் அசத்துவதில் இந்தியர்களுக்கு தனி இடம் உண்டு. அந்த வகையில், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த நபர் மின்சாரம் இன்றி இயங்கும் டிரெட்மில் ஒன்றை உருவாக்கி அசத்தி இருக்கிறார். இவர் உருவாக்கி இருக்கும் டிரெட்மில் மரத்தாலேயே செய்யப்பட்டது ஆகும்.

சுற்றுச்சூழலுக்கு எந்த விதமான மாசையும் ஏற்படுத்தாத மரத்தால் ஆன டிரெட்மில் உருவாக்கிய நபரின் விவரங்கள் அறியப்படவில்லை. இவர் டிரெட்மில் உருவாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவரின் முயற்சிக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து, இவரை கொண்டாடி வருகின்றனர்.

இவரின் மரத்தால் ஆன டிரெட்மில் தெலுங்கானா மாநிலத்துக்கான தொழிற்சாலை, வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் கே.டி. ராமா ராவ் வரை சென்றடைந்து இருக்கிறது. இவரின் முயற்சியை பாராட்டும் வரையில் கே.டி. ராமா ராவ் தனக்கு வந்த வைரல் வீடியோவை மற்றவர்களுக்கும் சென்றடையும் வகையில் அதனை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ரிடுவீட் செய்து இருக்கிறார்.

 

இத்துடன் ரிடுவீட் செய்யும் போது நாட்டின் முன்னணி ப்ரோடோடைப் நிறுவனமான டி-வொர்க்ஸ்-ஐ டேக் செய்து வீடியோவை பார்க்குமாறு அவர் வலியுறுத்தியதோடு, இவரை தொடர்பு கொண்டு இவருக்கு தேவையான உதவிகளை வழங்கவும் கோரிக்கை விடுத்து இருக்கிறார். 

45 நொடிகள் ஓடும் வீடியோவில் மர்ம நபர் டிரெட்மில் உருவாக்கும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. வீடியோவின் முதல் பாதி வரை இவர், மரத்தால் ஆன பாகங்களை ஒன்றுடன் ஒன்று மிக உறுதியாக பொருத்துகிறார். வீடியோவின் இறுதியில் மரத்தால் ஆன டிரெட்மில்லை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை விளக்குவதோடு, செயல் விளக்கமும் அளித்து இருக்கிறார். வீடியோவின் இறுதியில் மரத்தால் ஆன டிரெட்மில் வழக்கமான டிரெட்மில்களை போன்றே சீராக இயங்குவதை பார்க்க முடிகிறது.

டுவிட்டரில் இந்த வீடியோவை அருன் பகவதுல்லா என்பவர் பதிவிட்டார். பின் இவரின் பதிவு வேகமாக பரவியதை அடுத்து இந்த வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. இந்த வீடியோ இதுவரை சுமார் ஒரு லட்சத்திற்கும் அதின வியூக்களை பெற்று இருக்கிறது. வீடியோ வைரலானது கடந்து இவரின் முயற்சிக்கு சரியான அங்கீகாரம் கிடைப்பதோடு, இதனை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் சந்தைப்படுத்தப்பட வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios