Samsung Galaxy A24 விரைவில் அறிமுகம்.. விவரங்கள் உறுதியானது!
Samsung Galaxy A34, A54 5G ஸ்மார்ட்போன்கள் கடந்த வாரம் அறிமுகமான நிலையில், புதிதாக Galaxy A14 4G ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
சாம்சங் சமீபத்தில் தனது கேலக்ஸி ஏ-சீரிஸில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. அவை: கேலக்ஸி ஏ34 மற்றும் ஏ54 5ஜி ஸ்மார்ட்போன்கள் மற்றும் கேலக்ஸி ஏ14 4ஜி ஸ்மார்ட்போன்கள் ஆகும். இந்த நிலையில், தற்போது சாம்சங் கேலக்ஸி ஏ 24 ஸ்மார்ட்போனை துருக்கியில் அறிமுகப்படுத்தப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இது தொடர்பாக ஒரு இஸ்ரேலிய வலைத்தளம் கேலக்ஸி A24 4G தொலைபேசியின் படங்கள் மற்றும் அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, கடந்த மார்ச் மாதம் அறிமுகமான Galaxy A23 போனிற்கு அடுத்தபடியாக, அதே போல ஸ்னாப்டிராகன் 680 Soc பிராசசர் உள்ளது. LCD திரைக்கு பதிலாக AMOLED திரையைப் பெறும் என்று கூறப்படுகிறது.
மற்ற மாடல்களைப் போலவே, இது 3 பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது, மேலும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், 5000mAh பேட்டரி, அதற்கு றே்ப 25W வேகமான சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
Samsung Galaxy A24 தொடர்பாக கூறப்படும் சில அம்சங்கள்:
- திரை: 6.5-இன்ச் FHD+ சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளே, 90Hz ரெப்ரெஷ் ரேட்
- பிராசசர்: ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 6nm
- ரேம் மெமரி: 4ஜிபி ரேம், 128ஜிபி சேமிப்பு. 1TB வரை மெமரி கார்டு போடும் வசதி
- ஆண்ட்ராய்டு: Samsung One UI 5.0 உடன் Android 13
- சிம் வகை: இரட்டை சிம் கார்டுகள்
- கேமரா: 50MP பின்புற கேமரா, LED ஃபிளாஷ், OIS நுட்பம், 5MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 13MP முன் கேமரா
- சென்சார்: பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்
- சவுண்ட்: 3.5மிமீ ஆடியோ ஜாக், டால்பி அட்மாஸ்
- பரிமாணங்கள்: 162.1 x 77.6 x 8.3mm; எடை: 195 கிராம்
- நெட்வொர்க் வகை: டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, புளூடூத் 5, GPS + GLONASS
- பேட்டரி: 25W வேகமான சார்ஜிங் வசதியுடன் 5000mAh பேட்டரி
- நிறங்கள்: கருப்பு, வெள்ளி, சிவப்பு-பர்கண்டி மற்றும் லைம் வண்ணங்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கலக்கலான டிசைனில் வரும் iPhone 14 சீரிஸ்! ஆனா இத எதிர்பார்க்கல!!