MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • தொலைபேசி
  • கலக்கலான டிசைனில் வரும் iPhone 14 சீரிஸ்! ஆனா இத எதிர்பார்க்கல!!

கலக்கலான டிசைனில் வரும் iPhone 14 சீரிஸ்! ஆனா இத எதிர்பார்க்கல!!

ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் மஞ்சள் நிற வேரியண்டில், கலக்கலான டிசைனில் அறிமுகமாகியுள்ளது. 

2 Min read
Dinesh TG
Published : Mar 08 2023, 07:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

அண்மையில் அறிமுகமான ஐபோன் 14, ஐபோன் 14 ப்ளஸ் போன்கள் மிட்நைட், ஸ்டார் லைட், சிவப்பு, நீலம் , ஊதா நிற மாடல்களாக  வந்துள்ளன. இந்த நிலையில், தற்போது புதிதாக மஞ்சள் நிற வேரியண்டில் வந்துள்ளது. இந்தியாவில் புதிய மஞ்சள் நிற மாடலின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது.

இந்தியாவில் iPhone 14, iPhone 14 Plus (மஞ்சள் நிற மாடல்) விலை விவரங்கள்:

இந்தியாவில் புதிய ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மஞ்சள் நிற மாடல்களின் விலைகள் முறையே ரூ.79,900 மற்றும் ரூ.89,900 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இரண்டும் 256ஜிபி மெமரி, 512ஜிபி மெமரி என்ற அளவில் உள்ளது. வரும் மார்ச் 14 ஆம் தேதி முதல் மஞ்சள் நிற ஐபோன் விற்பனைக்கு வருகிறது.

வாடிக்கையாளர்கள் மார்ச் 10 ஆம் தேதி முதல் இதை முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ் போன்களுக்கான சிலிக்கான கவர்கள் நான்கு புதிய வண்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. அவை:  கேனரி மஞ்சள், ஆலிவ், வானம் மற்றும் கருவிழி நிறம் ஆகும்.
 

23

ஐபோன் 14, ஐபோன் 14 ப்ளஸ் சிறப்பம்சங்கள்:

திரையின் அளவு, பேட்டரியின் சக்தி ஆகியவை தவிர, iPhone 14 , iPhone 14 Plus இரண்டு போன்களும் ஒரே மாதிரியான அம்சங்களை கொண்டுள்ளன. ஐபோன் 14 போனில் 6.1 இன்ச் OLED டிஸ்ப்ளே உள்ளது, ஐபோன் 14 பிளஸ் மாடலில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது.  இரண்டு ஃபோன்களும் A15 பயோனிக் சிப் SoC (சிஸ்டம்-ஓவர்-சிப்) உள்ளன, இதில் 5-கோர் GPU மற்றும் 6-கோர் CPU ஆகியவை அடங்கும். மாறாக,  இதற்கு முந்தைய ஐபோன் 13 இல் உள்ள A15 பயோனிக் SoC ஆனது 6-கோர் CPU மற்றும் 4-core GPU கொண்டது குறிப்பிடத்தக்கது. 

Moto G73 5G launch on March 10: குறைந்த விலையில் நிறைந்த அம்சங்கள்

33

டிஸ்ப்ளே அளவுகளில் வேறுபாடுகள் இருந்தாலும், ஐபோன் 14, ஐபோன் 14 ப்ளஸ் ஆனது டால்பி விஷன் நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக செராமிக் ஷீல்டு உள்ளது.  இரண்டு ஃபோன்களும் 12 மெகாபிக்சல் கேமராக்களுடன் (அகலமான மற்றும் அல்ட்ரா-வைட்) வருகின்றன, முன்பக்கத்தில் 12 மெகாபிக்சல் கேமரா உள்ளது. அனைத்து கேமராக்களும் 60fps வேகத்தில் 4K வீடியோவை பதிவு செய்ய முடியும்.

இருட்டான சூழலில் கூட புகைப்படம் எடுப்பதற்காக ஐபோன் 14 சீரிஸில்  "ஃபோட்டானிக் என்ஜின்" என்ற நுட்பம் உட்புகுத்தப்பட்டுள்ளது. இந்த கேமரா மூலம் சினிமா வீடியோ தரத்தை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

About the Author

DT
Dinesh TG
Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்தியர்களுக்கு அதிரடி சரவெடி ஆஃபர் வழங்கிய அம்பானி.. ரூ.799க்கு அசத்தலான போன்
Recommended image2
ஆஹா.. இப்படி ஒரு ஆஃபரா..! இனி வீட்டுக்கு வீடு BSNL தான்.. 11 மாதத்திற்கான அட்டகாசமான பிளான்
Recommended image3
iPhone 17 Series: அடிதடியெல்லாம் வேண்டாம்.. வீட்டில் இருந்தபடி ஆஃபர் விலையில் ஐபோன் வாங்கலாம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved