Asianet News TamilAsianet News Tamil

ஒன்பிளஸ் பிரியர்களுக்கு குட்நியூஸ்.. அடுத்த வாரம் OnePlus Nord CE 3 Lite 5G அறிமுகம்!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய தயாரிப்பான OnePlus Nord CE 3 Lite ஸ்மார்ட்போன் விரைவில் வரவுள்ளது. இதில் என்னென்ன அம்சங்கள் இருக்கும், எதிர்பார்க்கப்படும் விலை விவரங்களை இங்குக் காணலாம்.

OnePlus Nord CE 3 Lite is set to launch in India on April 4, check specs price here
Author
First Published Mar 31, 2023, 6:24 PM IST

இந்தியாவில் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போனுக்கு அடுத்தபடியாக ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் நல்ல பெயரை பெற்றுள்ளது. ஒன்பிளஸில் பிரீமியம் ஸ்மார்ட்போனை வாங்க இயலாதவர்களுக்காக, நடுத்த பட்ஜெட் விலையில் ‘நார்டு’ என்ற மாடல் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகிறது. அந்த வகையில், தற்போது  OnePlus Nord CE 3 Lite 5G என்ற ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது. 

வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி இந்த OnePlus Nord CE 3 Lite 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது . OnePlus Nord Buds 2 அறிமுக நிகழ்விலேயே இந்த போனும் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கு முன்பு வெளியான Nord CE 2 Lite ஸ்மார்ட்போனின் விலை ரூ. 19,999 என்று அறிமுகமானது. எனவே, அதே போல இந்த முறையும் Nord CE 3 Lite ஸ்மார்ட்போனின் விலை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 
வழக்கம் போல், அறிமுக நிகழ்விற்கு முன்னதாகவே வரவிருக்கும் ஸ்மார்ட்போனி்ன் சில முக்கிய ஹார்டுவேர் விவரங்களை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, OnePlus Nord CE 3 Lite 5G போனில் நல்ல பேட்டரி திறன் மற்றும் சார்ஜிங் வேகம் இருப்பதாக தெரிகிறது. அதாவது, Nord CE 3 Lite போனில் 5,000mAh சக்தி கொண்ட பேட்டரி, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் இருப்பதாக ஒன்பிளஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதே போல் Nord CE 3 Lite ஸ்மார்ட்போனின் டிசைனும் நல்ல பிரீமியம் தோற்றத்தில் இருக்கிறது. வட்ட கேமரா அமைப்பு, ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனுக்கே உரித்தான நிறம், தோற்றம், டிசைன் உள்ளது. இது க்ரோமாடிக் கிரே என்ற நிறத்திலும் வரும் என ஒன்பிளஸ் உறுதி செய்துள்ளது.  இதற்கு முன்பு வெளியான Nord CE 2 Lite போனில் அலர்ட் ஸ்லைடர் இருந்தது.  ஆனால், இந்த முறை அந்த ஸ்லைடர் இருக்காது என தெரிகிறது. 

OnePlus 11 Jupiter Rock மாடல் அறிமுகம்! அது என்ன ஜூப்பிட்டர் ராக்? அசத்தல் கண்டுபிடிப்பு

கேமராவைப் பொறுது்தவரையில், போனின் முன்பக்கத்தில், ஒரு பஞ்ச் ஹோல் கேமரா உள்ளது. 6.7-இன்ச் 1080p IPS LCD டிஸ்ப்ளே, வேகமான 120Hz ரெப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசசர், 8GB வரையிலான ரேம், 128GB UFS2.2 மெமரி, 108MP பிரைமரி சென்சார் கேமரா, ட்ரிப்பிள் கேமரா, ஆண்ட்ராய்டு 13 நுட்பம் ஆகியவை உள்ளன. இது குறித்த முழுமையான அதிகாரப்பூர்வ விவரங்கள் வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி தெரியவரும்.

Follow Us:
Download App:
  • android
  • ios