Asianet News TamilAsianet News Tamil

விரைவில் அறிமுகமாகும் OnePlus 11.. ஆனால்....?

ஒன் ப்ளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்ப்ளஸ்11 ஸ்மார்ட்போனான விரைவில் அறிமுகம் செய்ய உள்ள நிலையில், இதிலுள்ள சிறப்பம்சங்ள் குறித்த விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன.

OnePlus 11 specifications leaked ahead of launch check details expected date here
Author
First Published Oct 20, 2022, 11:44 PM IST

கடந்தாண்டு Oneplus 10 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யாமல், OnePlus 10 Pro ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு நேர்மாறாக, தற்போது இந்தாண்டு, OnePlus 11 அறிமுகமாகும், ஆனால், OnePlus 11 Pro அறிமுகமாகாது என்று தகவல்கள் வந்துள்ளன. 

இதுகுறித்து டிப்ஸ்டர் டிஜிட்டல் செட் ஸ்டேஷனில் வெளியான ஒரு போஸ்டில் இந்த ஒன் ப்ளஸ் 11 இன் ஹார்டுவேர் பற்றிய விவரங்கள் இடம் பெற்று  உள்ளது. டிப்ஸ்டரின் தகவலின்படி, ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனில் 3126 x 1440 பிக்சல்  ரிசொல்யூஷன் உடன் 6.7- இன்ச் LTPO வளைந்த திரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

Google Pixel 7 Pro ஸ்மாரட்போனில் கோளாறு! பயனர்கள் புகார்!!

ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 சிப்செட். 48MP லென்ஸ் மற்றும் 32MP கேமரா, 50MP ப்ரைமரி சென்சார் கேமரா, பின்புறத்தில் டிரிபிள் கேமரா ஆகியவை உள்ளன.
மேலும் இது 100 W வேகமான சார்ஜ் வசதியுடன் 5,000 mAh சக்தி கொண்ட பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. கடந்த மாதம், டிப்ஸ்டர் நிறுவனத்தின் ஸ்டீவ் ஹெச் மெக்ஃப்ளை (Steve H McFly) என்பவர் ஒன் ப்ளஸ் 11 ஆனது 16 GB மற்றும் 256 GB இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வரும் என்று கூறியிருந்தார். 

Apple iPad Pro 2022 இந்தியாவில் அறிமுகம்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!

மேலும், அலர்ட் ஸ்லைடர் என்ற அம்சம் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் இதற்கு முன்பு ஒன் ப்ளஸ் 10 R மற்றும் ஒன் ப்ளஸ் 10 T ஸ்மார்ட்போனில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் ஒன்பிளஸ் 11 வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் 11 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான எல்லா அம்சங்களும் இந்த ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளன. எனவே, இம்முறை ஒன்பிளஸ் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios