அடேங்கப்பா இப்படி ஒரு ஆஃபரா? புத்தாண்டு பரிசாக 120 ஜிபி டேட்டாவை வழங்கும் BSNL
2025 புத்தாண்டு விரைவில் தொடங்க உள்ள நிலையில், விழாக்கால சலுகையாக 2 மாத்ததிற்கு 120 ஜிபி டேட்டாவை வழங்குகிறது BSNL நிறுவனம்.
பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதில் BSNL நிறுவனம் மும்முரமாக உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஜூலை மாதத்தில் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தின.
இதனைத் தொடர்ந்து கணிசமான மக்கள் பிஎஸ்என்எல் பக்கம் திரும்பினர், ஏனெனில் BSNL வசம் பல மலிவான திட்டங்கள் உள்ளன. மக்கள் ஆர்வம் காட்டியதால், பிஎஸ்என்எல் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை விரைவில் தொடங்குவதற்கான ஆயத்தங்களை தீவிரப்படுத்தி வருகிறது. தற்போது BSNL புத்தாண்டு சலுகையை கொண்டு வந்துள்ளது. BSNLன் அதிரடி தள்ளுபடியைப் பார்த்து தனியார் தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் பொறாமைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
BSNL Rs 277 Plan
பிஎஸ்என்எல் நிறுவனம் பண்டிகை கால சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய திட்டத்தின் விலை ரூ.277, இதில் பயனர் 60 நாட்கள் வேலிடிட்டியைப் பெறுவார். இது தவிர 120ஜிபி டேட்டா கிடைக்கும். அதாவது தினமும் 2ஜிபி டேட்டா. தினசரி டேட்டா தீர்ந்த பிறகு, இணைய வேகம் 40Kbps ஆக குறையும். இந்த ஆஃபர் ஜனவரி 16 வரை மட்டுமே என்று உங்களுக்குச் சொல்கிறோம். அதன் பிறகு நீங்கள் ரீசார்ஜ் செய்ய முடியாது என பிஎஸ்என்எல் X இல் பதிவிட்டு தகவலைப் பகிர்ந்துள்ளது.
5ஜி சேவை 2025ல் தொடங்கும்
BSNL இன் 4G மற்றும் 5G சேவைகள் 2025 ஆம் ஆண்டில் மட்டுமே தொடங்கும், இதில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு டிசிஎஸ் தலைமை இயக்க அதிகாரி என். கணபதி சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்தியாவின் தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மே 2025க்குள் ஒரு லட்சம் இடங்களில் 4G நெட்வொர்க்கை பிஎஸ்என்எல் தொடங்கும் என்று கூறியிருந்தார். இதற்குப் பிறகு, ஜூன் 2025 இல் 5G நெட்வொர்க் தொடங்கும்.
பிஎஸ்என்எல்லின் 4ஜி-5ஜி சேவைகள் சரியான நேரத்தில் தொடங்கும் என்று டிசிஎஸ் உறுதி செய்துள்ளது. அதிவேக இணையத்திற்காக காத்திருந்த மில்லியன் கணக்கான பிஎஸ்என்எல் பயனர்களுக்கு இது பெரும் நிம்மதியை அளித்துள்ளது. திட்டமிட்டபடி பணிகள் நடந்து வருவதாகவும், குறித்த காலத்துக்குள் அனைத்து பணிகளும் முடிவடையும் என்றும் டிசிஎஸ் தெரிவித்துள்ளது.