கார் மாடல்கள் விலையை உயர்த்திய டாடா மோட்டார்ஸ்... புது அறிவிப்பால் பயனர்கள் அதிர்ச்சி..!

இம்முறை கார் மாடல்கள் விலை 1.1 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது. விலை உயர்வு கார் மாடல் மற்றும் வேரியண்ட்களுக்கு ஏற்ப வேறுபடும்.

Tata Motors Announces Price Hike Across Its Entire Passenger Vehicle Range

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பயணிகள் வாகன கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு இன்று (ஏப்ரல் 23) முதல் அமலுக்கு வந்தது. உற்பத்தி செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் விலை உயர்வு அறிவிக்கப்படுவதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்து உள்ளது. இம்முறை கார் மாடல்கள் விலை 1.1 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது. விலை உயர்வு கார் மாடல் மற்றும் வேரியண்ட்களுக்கு ஏற்ப வேறுபடும்.

புதிய விலை விவரங்கள்:

டாடா டியாகோ மாடல் விலை ரூ. 5 லட்சத்து 22 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 7 லட்சத்து 67 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

டாடா பன்ச் மாடல் விலை ரூ. 5 லட்சத்து 67 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9 லட்சத்து 48 ஆயிரம் ஆகும்.

டாடா டிகோர் மாடல் விலை ரூ. 5 லட்சத்து 82 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 8 லட்சத்து 44 ஆயிரம் என மாறி இருக்கிறது.

டாடா டிகோர் EV மாடல் விலை ரூ. 12 லட்சத்து 24 ஆயிரம் ஆகும். இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13 லட்சத்து 39 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

டாடா அல்ட்ரோஸ் மாடல் விலை ரூ. 6 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 10 லட்சம் என நிர்ணயம் மாறி இருக்கிறது.

டாடா நெக்சான் மாடல் விலை ரூ. 7 லட்சத்து 42 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13 லட்சத்து 73 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

டாடா நெக்சான் EV மாடல் விலை ரூ. 14 லட்சத்து 54 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17 லட்சத்து 15 ஆயிரம் என மாறி இருக்கிறது.

டாடா ஹேரியர் மாடல் விலை ரூ. 14 லட்சத்து 52 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 21 லட்சத்து 81 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

டாடா சஃபாரி மாடல் விலை ரூ. 15 லட்சத்து 02 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 23 லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios