Asianet News TamilAsianet News Tamil

Smartphone test covid : இனி அந்த சங்கடம் இருக்காது - விரைவில் ஸ்மார்ட்போன் மூலம் கொரோனா தொற்றை கண்டறியலாம்!

ஸ்மார்ட்போன் கேமரா கொண்டு கொரோனாவைரஸ் தொற்றை கண்டறிந்து கொள்ளும் வழிமுறை விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

Soon you could use your smartphone camera to test for Covid infection
Author
Tamil Nadu, First Published Jan 31, 2022, 9:39 AM IST

உலகளாவிய மருத்துவ உள்கட்டமைப்பு மூலம் கொரோனாவைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இரண்டு ஆண்டுகள் பழைய தொற்று தான் என்றாலும் தினந்தோரும் இதன் புது உருமாற்றங்கள் மருத்துவ துறை நிபுணர்களை கலக்கத்தில் ஆழ்த்தி வருகிறது. பல்வேறு நாடுகளில் கொரோனாவைரஸ் தொற்றை எதிர்கொள்ளும் நோக்கிலும், அதனை கட்டுப்படுத்துவது மற்றும் பரவாமல் தடுக்கவும் எண்ணற்ற முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

எனினும், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதே இதற்கு சிகிச்சை அளிப்பதற்கான முதற்கட்ட வழிமுறையாக இருக்கிறது. தற்போது ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய - ரேபிட் ஆண்டிஜன் டெஸ்ட் (RAT) அல்லது RT-PCR போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை இரண்டும் ஏழ்மையில் சிக்கித் தவிக்கும் மக்களால் எளிதில் மேற்கொள்ள முடியாததாகவே இருக்கின்றன. 

Soon you could use your smartphone camera to test for Covid infection

விரைவில், இந்த நிலை மாறும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கொரோனாவைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய புது வழிமுறையை ஆய்வாளர்கள் உருவாக்கி வருகின்றனர். இந்த வழிமுறை மிக குறைந்த கட்டணத்தில் மேற்கொள்ள முடியும் என்பதால் ஏழ்மை குடும்பத்தாரும் கொரோனாதொற்று பரிசோதனை செய்து கொள்ளலாம். புது வழிமுறை ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை தெரிவித்து விடுகிறது. 

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்கும் புதிய வழிமுறைக்கான உபகரணத்தை 100 டாலர்களுக்கும் குறைந்த கட்டணத்தில் உருவாக்கி விட முடியும். உபகரணம் உருவாக்கிய பின் பரிசோதனை ஒன்றுக்கு 7 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 525 செலவு ஆகும்.

Soon you could use your smartphone camera to test for Covid infection

பரிசோதனைக்கான உபகரணத்தை உருவாக்க சூடான பிளேட், ரியாக்டிவ் திரவம் மற்றும் ஸ்மார்ட்போன்களை கொண்டு உருவாக்கி விட முடியும். மேலும் இதற்காக ஆய்வாளர்கள் உருவாக்கி இருக்கும் இலவச செயலியை பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த செயலி பேக்டி-கவுண்ட் (Bacticount) என அழைக்கப்படுகிறது. இந்த செயலி  பயனர் ஸ்மார்ட்போனின் கேமரா பதிவு செய்த தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்து கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை தெரிவிக்கிறது.

ஹாட் பிளேட் மீது வைக்கப்பட்டுள்ள பரிசோதனை கிட் மீது பயனர்கள் தங்களின் எச்சிலை வைக்க வேண்டும். இதன் பின் ரியாக்டிவ் திரவத்தை அதன் மீது ஊற்ற வேண்டும். இவ்வாறு செய்ததும் திரவத்தின் நிறம் மாறும். இனி பயனர் எச்சிலில் எவ்வளவு வைரஸ் உள்ளது என்பதை திரவத்தின் நிறம் எந்தளவு மாறி இருக்கிறது என்பதை செயலி கண்டறிந்து தெரிவிக்கும்.  தற்போது கண்டறியப்பட்டு இருக்கும் ஐந்து விதமான கொரோனா வைரஸ் தொற்றையும் இந்த வழிமுறை கொண்டு கண்டறிந்து விட முடியும். 

தற்போது இந்த உபகரணம் 50 நோயாளிகளிடம் மட்டுமே சோதனை செய்யப்பட்டுள்ளது. இதற்கென சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் மாடல்கள் பயன்படுத்தப்பட்டன. ஆய்வின் பரிசோதனை மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்பதால், இந்த உபகரணம் பயன்பாட்டுக்கு வர மேலும் சில காலம் ஆகும். 

Follow Us:
Download App:
  • android
  • ios