யூடியூப், இன்ஸ்டா பிரபலங்களே இனி இப்படி செய்தால்.. ரூ.50 லட்சம் வரை அபராதம்!

சமூக ஊடகங்கள் மூலம் பிரபலமாக இருப்பவர்கள் பணம் பெற்றுக்கொண்டு விளம்பரம் செய்தால், அதுகுறித்து பயனர்களுக்கு தெரிவிக்க வேண்டும், தவறினால் 50 லட்சம் ரூபாய் வரையில் அபராதம் விதிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

Social media influencers to pay Rs 50 lakh fine if they fail to declare paid promotions, check details here

சமூக ஊடகங்களில் பிரபலமாக இருப்பவர்களுக்கானபுதிய வழிகாட்டுதல்களை நுகர்வோர் விவகார அமைச்சகம் டிசம்பர் 24 அன்று நடைமுறைப்படுத்துகிறது என்று தகவல்கள் வந்துள்ளன தெரிவித்துள்ளன. அதன்படி, யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டா உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் பிரபலமாக இருப்பவர்கள் காட்டுகின்றன ஏதாவது தயாரிப்பை விளம்பரம் செய்வதற்கு பணம் பெற்றிருந்தால் அதுகுறித்து அவர்களின் பின்தொடரும் பயனர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

எனவே இன்று முதல், சமூக ஊடக பிரபலங்கள் பிற நிறுவனங்களின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்கு பணம் பெற்றால் தங்களைப் பின்தொடர்பவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு அது விளம்பர வீடியோ என்று தெரிவிக்க தவறினால், அவர்கள் மீது மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தில் (சிசிபிஏ) புகார் செய்யலாம் மற்றும் ரூ 50 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Social media influencers to pay Rs 50 lakh fine if they fail to declare paid promotions, check details here

சமூக ஊடகங்களில் குறிப்பாக யூடியூப், இன்ஸ்டாவில் பிரபலமாக இருப்பவர்கள் சில நேரங்களில் அவர்களது வீடியோ, பதிவுகள் மூலம் தயாரிப்புகளை கண்மூடித்தனமாக விளம்பரப்படுத்துகிறார்கள். இதை அவர்களைப் பின்தொடர்பவர்களும் கண்மூடித்தனமாக நம்பி ஏமாந்துவிடுகிறார்கள். உதாரணத்திற்கு ஒரு ஹோட்டலில் பணம் பெற்று கொண்டு அந்த ஹோட்டலில் உணவு அற்புதமாக இருப்பதாக கூறும் போது, அவர்களைப் பின்தொடர்பவர்களும் அதே ஹோட்டலுக்குச் சென்று உணவுருந்துகிறார்கள். சில சமயம் அது மோசமான உணவாக இருக்கும் பட்சத்தில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். 

வாட்ஸ்அப்பில் 37 லட்சம் இந்திய கணக்குகள் தடை! காரணம்…

இதே போல் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் யூடியூப் பிரபலங்களைப் பயன்படுத்துகின்றனர்.. அந்த யூடியூபர்களும் அது பணம் பெற்றுக்கொண்டு மோசமான ஸ்மார்ட்போனை அதில் உள்ள நிறைகளை மட்டும் காட்டி விளம்பரம் செய்கிறார்கள். இதனால் அந்த வீடியோவைப் பார்க்கும் பயனர்கள், ஸ்மார்ட்போனின் உண்மை நிலை அறியாமல், வாங்கி ஏமாற்றம் அடைகிறார்கள். இதைத் தடுக்கவே இப்படியான புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளது. 

இதன்பிறகு பொதுமக்கள் யூடியூப், இன்ஸ்டா போன்றவற்றைப் பார்க்கும் போது, அந்த பிரபலங்கள் அளிக்கும் விமர்சனங்கள் உண்மையான விமர்சனமா அல்லது பணம் பெற்றுக்கொண்டு விளம்பரம் செய்கிறார்களா என்பதை பார்த்து விட்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios