Asianet News TamilAsianet News Tamil

73-வது குடியரசு தினம்  - விசேஷ லென்ஸ் வெளியிட்ட ஸ்னாப்சாட்

ஸ்னாப்சாட் செயலியில் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு விசேஷ ஸ்டிக்கர்கள், லென்ஸ்கள் மற்றும் ஜியோஃபில்ட்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Snapchat Launches Special Lenses, Geofilters, Stickers to Commemorate India's 73rd Republic Day
Author
Tamil Nadu, First Published Jan 26, 2022, 1:58 PM IST

இந்தியாவின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஸ்னாப்சாட் இந்தியா புதிய லென்ஸ்கள், ஜியோ ஃபில்ட்டர்கள், ஸ்டிக்கர்கள், பிட்மோஜி, பிட்மோஜி ஜியோஃபில்ட்டர்கள் மற்றும் ஹைப்பர்லோக்கல் ஜியோஃபில்ட்டர்களை வெளிட்டுள்ளது.  புதிய ஃபில்ட்டர்களை அறிமுகம் செய்ததோடு, சேவையின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், கிரியேட்டர்களுடன் உரையாட முடிவு செய்து இருப்பதாக ஸ்னாப் தெரிவித்து இருக்கிறது.

இத்துடன் விவோ, ஒப்போ மற்றும் சாம்சங் போன்ற  நிறுவனங்களுடன் இணைந்து புது லென்ஸ்கள் வழங்கப்பட்டு இருப்பது குறித்த விளம்பரங்களை வெளியிட இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த லென்ஸ்கள் ஏற்கனவே செயலியில் வழங்கப்பட்டு விட்டன. இவற்றை செயலியின் எக்ஸ்புளோர் டேப் சென்று பயன்படுத்த முடியும். 

Snapchat Launches Special Lenses, Geofilters, Stickers to Commemorate India's 73rd Republic Day

குடியரசு தின லென்ஸ், ஜியோஃபில்ட்டர், ஸ்டிக்கர், பிட்மோஜி, பிட்மோஜி ஜியோஃபில்ட்டர் மற்றும் ஹைப்பர்லோக்கல் ஜியோஃபில்ட்டர்களை கொண்டு பயனர்கள் குடியரசு தினத்தை கொண்டாடலாம். புதிய லென்ஸ்கள் மூவண்ண தொப்பியை பயனர்களுக்கு வழங்குகிறது. இதை கொண்டு பயனர்கள் மற்றவர்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ள முடியும். புது லென்ஸ்களை வழங்குவதற்காக பல்வேறு புதுமைகளை செயலியில் அறிமுகம் செய்து இருப்பதாக ஸ்னாப்சாட் தெரிவித்துள்ளது.

ஸ்னாப்சாட் முன்னணி ஆண்ட்ராய்டு ஒரிஜினல் உபகரணங்கள் உற்பத்தியாளர்களுடன் கூட்டணி அமைத்து இருக்கும் முதல் மற்றும் ஒரே நாடு இந்தியா தான் என அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக இதுகுறித்த விளம்பரங்கள் விவோ, ஒப்போ மற்றும் சாம்சங் நிறுவன சாதனங்களில் வெளியிடப்பட இருக்கிறது. மேலும் இந்திய கிரியேட்டர்களுடன் கூட்டணி அமைத்து சிறப்பு விளம்பரங்கள் வெளியிடப்பட இருப்பதாகவும் ஸ்னாப்சாட் தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios