Asianet News TamilAsianet News Tamil

அடுத்தடுத்து வெடிக்கும் ஸ்மார்ட்போன்.. 8 மாத குழந்தை பலி.. பேட்டரி வெடிப்புக்கு காரணம் என்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் சுனில் குமார் என்பவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் வழக்கம் போல் வேலைக்குச் சென்றுவிட்டு, மதியம் உணவருந்த வந்தார். அப்போது அவரது 8 மாத குழந்தை படுக்கையறையில் உறங்கிக் கொண்டிருந்தது. அதன் அருகில் செல்போன் சார்ஜ் போட்டு வைத்திருந்தார். 

Smartphone that explodes one after the other.. 8-month-old child dies.. What is the cause of battery explosion?
Author
First Published Sep 15, 2022, 1:42 PM IST

உத்தரப்பிரதேசத்தில் சார்ஜ் ஆகிக்கொண்டிருந்த மொபைலின் பேட்டரி வெடித்ததன் விளைவாக எட்டு மாத குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் சுனில் குமார் என்பவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் வழக்கம் போல் வேலைக்குச் சென்றுவிட்டு, மதியம் உணவருந்த வந்தார். அப்போது அவரது 8 மாத குழந்தை படுக்கையறையில் உறங்கிக் கொண்டிருந்தது. அதன் அருகில் செல்போன் சார்ஜ் போட்டு வைத்திருந்தார்.  அப்போது திடீரென சுனிலின் செல்போன் வெடித்துச் சிதறியது. சத்தம் கேட்டு ஓடி வந்த சுனில், இரத்த காயத்தில் கிடந்த அவரது 8 மாத குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது. 

பேட்டரி இந்த சம்பவத்திற்கு அந்த குழந்தையின் பெற்றோரே காரணம் என்றும், பேட்டரி காலாவதியாகி ஊதி பெருத்திருந்தை கூட பொருட்படுத்தாமல் பயன்படுத்தி வந்ததாகவும் தகவல்கள் வந்துள்ளன. பெற்றோர்களின் அறியாமையால் பச்சிளம் குழந்தை பலியாகிய. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்மார்ட்போனை தலையணைக்கு அடியில் வைத்துபடுத்ததால், செல்போன் வெடித்து முதியவர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி வெடிப்புக்கு என்ன காரணம்?

ஸ்மார்ட்போன் பேட்டரி என்பது முழுக்க முழுக்க வேதிபொருட்களின் கலவையினால் ஆனது. எனவே, போனை பயன்படுத்தினாலும், பயன்படுத்தாவிட்டாலும் வேதியல் மாற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கும். செல்போன் உபயோகத்தின் போது பேட்டரி பயன்பாட்டிலும் சிறிது கவனம் இருக்க வேண்டும். ஸ்மார்ட்போன்களை தனியாக சார்ஜ் போட வேண்டும், சார்ஜில் இருக்கும் போது ஸ்மார்ட்போனை பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அதில் அதிகமாக அதிர்வலைகள் வீசுவதால் அது ஆபத்தாக மாற வாய்ப்புகள் உள்ளது. 

குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் அதனை தலையணைக்கி அடியில் வைத்துக்கொண்டு உறங்கக்கூடாது. நம்மில் பலருக்கு இரவு நேரங்களில் ஸ்மார்ட்போன்களை தலையணைக்கி அடியில் வைத்துக்கொண்டு உறங்கும் பழக்கம் உள்ளது. அதிலிருந்து வரும் கதிர்வீச்சானது நம் மூளைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஆகையால் அதனை தலையணைக்கி அடியில் வைத்துக்கொண்டு உறங்கக்கூடாது. ஸ்மார்ட்போன் வெடிக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. எனவே பயனர்கள் மிகவும் உஷாராக இருக்கவேண்டும். ஸ்மார்ட்போனை முறையாக பராமரிக்காவிட்டால் அது நமக்கே ஆபத்தாக வாய்ப்புகள் உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios