Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் ஒரு பட்ஜெட் ஸ்மார்ட் போன்.. அதுவும் 5G.. அசத்தும் Samsung Galaxy F15 5G - விலை மற்றும் ஸ்பெக் விவரம்!

Samsung Galaxy F15 5G : செல் போன் தயாரிப்பிலும் பெரிய அளவில் புகழ் பெற்ற சாம்சங் நிறுவனம் தனது புதிய 5 G ஸ்மார்ட் போன் ஒன்றை இன்று மார்ச் 4ம் தேதி அறிமுகம் செய்துள்ளது.

Samsung introducing galaxy f15 5g today spec and price details ans
Author
First Published Mar 4, 2024, 3:31 PM IST

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஃப்15 5ஜி, சமீபத்திய எஃப்-சீரிஸ் ஸ்மார்ட்போனாக இன்று திங்கள்கிழமை (மார்ச் 4) இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய புதிய கைபேசி 90Hz AMOLED திரையுடன் வருகிறது மற்றும் MediaTek Dimensity 6100+ SoCல் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. Galaxy F15 5G ஆனது மூன்று வெவ்வேறு வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது. 

மேலும் இரண்டு நாட்கள் வரை பயன்பாட்டை வழங்குவதாகக் கூறப்படும் ஒரு பெரிய பேட்டரி மூலம் சக்தியை பெறுகின்றது இந்த புதிய ஸ்மார்ட் போன். Galaxy F15 5G ஆனது கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவில் வெளியிடப்பட்ட Galaxy A15 5Gன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகத் தெரிகிறது என்கிறார்கள் நெட்டிசன்கள்.

சமையல் போட்டியில் ஜெயித்தால் பணம் கொட்டும்.. புதிய பேஸ்புக் மோசடியில் சிக்கிடாதீங்க..!

இந்த Galaxy F15 5Gயின் ஆரம்ப விலை 4ஜிபி RAM மற்றும் 128ஜிபி ROM என்ற பேசிக் மாடல் 12,999 என்ற விலைக்கு விற்பனையாகிறது. அதே போல 6ஜிபி RAM மற்றும் 128ஜிபி ROM மாடலிலும் கிடைக்கிறது, இதன் விலை ரூ. 14,499. இந்த கைபேசியானது ஆஷ் பிளாக், க்ரூவி வயலட் மற்றும் ஜாஸ்ஸி கிரீன் வண்ணங்களில் வருகிறது.

சாம்சங் இந்தியா இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவலின்படி இன்று மார்ச் 4ம் தேதி மாலை 7:00 மணிக்கு (இந்திய நேரப்படி) விற்பனைக்கு வருவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நினைவுகூரும் வகையில், Galaxy A15 5G ஆனது கடந்த ஆண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் ஆரம்ப விலை சுமார் 19,499 என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் திடீரென முடங்கிய ஏர்டெல் மொபைல் நெட்வொர்க்!

Follow Us:
Download App:
  • android
  • ios