சிந்தித்தே பார்க்க முடியாத பிரைவேசி பாதுகாப்பு அம்சங்களுடன் சாம்சங் அறிமுகப்படுத்திய Galaxy A51 மற்றும் A71
உங்களது மொபைலை பார்ப்பதற்காக யாராவது கேட்டால், நீங்கள் பதற்றமடைகிறீர்களா..? இனி வேண்டாம்.. Quick Switch மற்றும் Intelligent Content Suggestions-ன் மூலம் பிரைவசி பாதுகாக்கப்படும்.
ஒரு ஸ்மார்ட்ஃபோனில் பலவிதமான பணிகளை செய்ய முடியும். எனவே ஸ்மார்ட்ஃபோன் அத்தியாவசியமாகிவிட்டது. உங்களிடம் ஒரு நல்ல ஸ்மார்ட்ஃபோன் இருந்தால், நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்புவது, குழு பணி செய்வது, ஆன்லைன் வகுப்புகள் என அனைத்தையும் செய்துவிடமுடியும்.
ஆனால் அதேவேளையில் ஸ்மார்ட்ஃபோன்களில் பிரைவசி பாதுகாப்பு ஒரு சவாலாகவே இருந்துவந்துள்ளது. ஏனெனில் இந்திய கலாச்சாரம் குடும்பமாக வாழும் கலாச்சாரம். அதனால் ஒன்றாகவும் நெருக்கமாகவும் வசிப்பதால், உங்கள் மொபைலில் இருக்கும் தனிப்பட்ட விஷயங்களை பார்ப்பதற்கான வாய்ப்புகளும், நீங்கள் பேசுவதை கேட்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எனவே பிரைவசியை பாதுகாப்பது சவாலாக இருந்தது.
உங்கள் ஸ்மார்ட்ஃபோனின் பிரைவசியை பாதுகாப்பது எப்படி?
சாம்சங் அறிமுகப்படுத்தியுள்ள Galaxy A51 மற்றும் Galaxy A71 ஆகிய மாடல் மொபைல்களில், Quick Switch மற்றும் Intelligent Content Suggestions என்ற 2 அம்சங்களின் மூலம் பிரைவசியை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் Galaxy A51 மற்றும் Galaxy A71 வைத்திருந்தால், பிரைவசி குறித்த பயப்பட தேவையில்லை.
Quick Switch மிகச்சிறந்த அம்சமாகும். உங்கள் மொபைலை யாராவது பார்க்க முற்பட்டால் உடனடியாக Power Buttonஐ இருமுறை கிளிக் செய்தால், பிரைவேட் மோடில் இருந்து பப்ளிக் மோடிற்கு மாறிவிடும். நீங்கள் அதிகம் பயன்படுத்தும் அல்லது உங்களுக்கு பிடித்த ஆப்களுக்குள் சென்றுவிடும். எனவே நீங்கள் பார்த்துக்கொண்டிருந்த உங்களது பிரைவசியான விஷயத்தை உங்களுக்கு அருகில் இருப்பர் பார்க்கமுடியாது.
Quick Switch எப்படி உங்களது பிரைவசியை பாதுகாக்கிறது என்று பார்ப்போம்.
நீங்கள் மகிழ்ச்சியாக சுற்றுப்பயணம் சென்றுவிட்டு, விடுமுறை முடிந்து அலுவலகம் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் விடுமுறைக்காலத்தில் மகிழ்ந்திருந்த புகைப்படங்களை அலுவலகத்தில் உங்கள் நண்பர்களிடம் காட்டிக்கொண்டிருக்கிறீர்கள். அந்த புகைப்படங்களை நீங்களும் உங்கள் நண்பர்களும் மட்டுமே பார்க்கக்கூடியவை எனில், அப்போது திடீரென உங்கள் பாஸ் வந்துவிட்டால், நீங்கள் பவர் பட்டனை இருமுறை கிளிக் செய்தால் போதும். இந்த வீடியோவில் ராதிகா மதன் அவரது பாஸிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்று பாருங்கள்.
Chat: காதலர் தினத்தன்று நீங்கள் உங்கள் காதலனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று நினைத்து, உங்கள் தோழியிடம் ஐடியா கேட்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் தோழியும் சில ஐடியாக்களை வழங்குகிறார். அதில் ஒன்று உங்களுக்கு மிகவும் பிடித்துப்போய் அந்த மகிழ்ச்சியில் நீங்கள் இருக்கும்போது, நீங்கள் கவனிக்காத நேரத்தில் வந்து திடீரென உங்கள் காதலன் உங்களுக்கு அருகில் நின்றால், நீங்கள் கொடுக்க விரும்பிய சர்ப்ரைஸ் தெரிந்துபோய்விட்டதோ என்று பதற்றமெல்லாம் படாமல், அவர் தெரிந்துகொள்ள முடியாதபடி, உடனடியாக பவர் பட்டனை அழுத்தி பிரைவேட் மோடில் இருந்து பப்ளிக் மோடிற்கு சென்றுவிடலாம்.
ராதிகா மதனை குயிக் ஸ்விட்ச் எப்படி காக்கிறது என்று இந்த வீடியோவில் பாருங்கள்.
ப்ரௌசர்: உங்கள் தங்கையின் பிறந்தநாளுக்கு அவருக்கு தெரியாமல் சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து ஆன்லைனில் ஆர்டர் செய்வதை உங்கள் தங்கை பார்த்துவிடக்கூடாது என்று நினைத்தால், உடனடியாக உங்கள் மொபைல் திரையை பிரைவேட் மோடிலிருந்து பப்ளிக் மோடிற்கு மாற்றிவிடலாம்.
சர்ப்ரைஸ் கொடுக்க விரும்பும் ராதிகா மதன், எப்படி அந்த சர்ப்ரைஸ் சம்மந்தப்பட்டவருக்கு தெரியாமல், குயிக் ஸ்விட்ச் அவரை காக்கிறது என்று பார்ப்போம்.
Intelligent Content Suggestion உங்கள் வாழ்க்கையை இன்னும் எளிதாக்கும். Galaxy A51 மற்றும் Galaxy A71 ஆகிய இரண்டிலுமே On Device AI என்ற வசதி உள்ளது. எவற்றையெல்லாம் நீங்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவற்றை On Device AI மூலம் உங்களால் பாதுகாத்துக்கொள்ள முடியும். நீங்கள் பிரைவசியாக வைத்திருக்க விரும்பும் புகைப்படங்களை பிரைவேட் கேலரியில் வைத்துக்கொள்ளலாம். பிரைவேட்டாக வைக்க விரும்பும் முகங்கள் மற்றும் புகைப்படங்களை பிரைவேட் டேக் போட்டு பாதுகாத்துக்கொள்ளலாம்.
சாம்சங் Galaxy A51 மற்றும் Galaxy A71 ஆகிய ஸ்மார்ட்ஃபோன்களில் பிரைவசி அம்சங்களை எப்படி செயல்படுத்துவது என்பதை இந்த வீடியோக்களில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
Alt Z Life பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா..?
Quick Switch மற்றும் Content Suggestion ஆகிய 2 வசதிகளும் பிரைவேசி பாதுகாப்பு தொழில்நுட்பமான Alt Z Life தொழில்நுட்பத்தை முழுமையாக்குகிறது.
நீங்கள் வீட்டில் இருந்தாலும் சரி, மெட்ரோ ரயிலில் போனாலும் சரி, Alt Z Life தொழில்நுட்பத்தின் மூலம் நீங்கள் மொபைலில் உரையாடல்களையும் ஃபோட்டோக்களையும் மற்றவர்களுக்கு தெரியாமல் பாதுகாக்க முடியும். உங்கள் மொபைல் பிரைவசியை பாதுகாக்க Galaxy A51 மற்றும் Galaxy A71 மொபைல்கள் உத்தரவாதம் அளிக்கிறது.
எனவே தாமதிக்காமல் உடனே சென்று Galaxy A51 மற்றும் Galaxy A71 மொபைல்களை வாங்குங்க..