Asianet News TamilAsianet News Tamil

கொஞ்சம் பொறுத்திருங்க.. இந்த 3 ஸ்மார்ட்போன்கள் வரப் போகுது!

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படும் அனைத்து ஃபோன்களையும் இங்கே பார்க்கலாம். புதிதாக ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இவற்றைக் கருத்தில் கொள்ளலாம்.

Samsung Galaxy S23 to Redmi Note 12 Pro+  Phones likely to launch in early 2023
Author
First Published Dec 13, 2022, 10:15 PM IST

இந்த 2022 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. அடுத்த ஆண்டு வரவிருக்கும் 5G ஸ்மார்ட்போன்கள் பற்றிய விவரங்கள் வந்த வண்ணம் உள்ளன. தொடங்கியுள்ளன. சில ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அவற்றின் வரவிருக்கும் புத்தம் புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதியையும் உறுதி செய்துள்ளன. Redmi Note 12 Pro+ ஆனது ஜனவரி 5 ஆம் தேதி இந்தியாவிற்கு வருகிறது, அதேசமயம் iQOO 11 ஜனவரி 10 ஆம் தேதி அறிவிக்கப்படும். எனவே, புதிய ஸ்மார்ட்போன்கள் வாங்க விரும்புகிறவர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்கலாம்.

Samsung Galaxy S23

சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரிஸ் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்படும். இது ஒரு ஃபிளாக்ஷிப் சீரிஸ் என்பதால், உயர்தர அம்சங்களை பிரீமியம் விலையில் எதிர்பார்க்கலாம். அடிப்படையாக 256 ஜிபி மெமரியுடன் வரலாம் என்று கூறப்படுகிறது. Snapdragon 8 Gen 2 SoC பிராசசர் இதில் இருக்கலாம். 

Redmi Note 12 Pro+

Redmi Note 12 Pro+ அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும். இந்த 5ஜி போனின் அறிமுக தேதியை ரெட்மி நிறுவனம் ஏற்கெனவே உறுதி செய்துள்ளது. இதில் 200 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 6.67-இன்ச் FHD+ OLED 120Hz டிஸ்ப்ளே, டால்பி விஷன்,  HDR10+, மீடியாடெக் டிமன்சிட்டி 1080 SoC பிராசசர் இருக்கலாம். இது 120W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh சக்தி கொண்ட பேட்டரி இதில் எதிர்பார்க்கப்படுகிறது.

அடேங்கப்பா.. 200MP கேமராவா.. கலக்கலாக வரும் Redmi Note 12 Pro Plus 5G! அறிமுக தேதி அறிவிப்பு!!

iQOO 11

iQOO 5G சீரிஸ் அடுத்த மாதம் அதாவது ஜனவரி 10, 2023 அறிமுகமாகிறது.  இதில் 6.78-இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன்8 Gen 2 பிராசசர், 5,000mAh பேட்டரி, 120W சார்ஜர் எதிர்பார்க்கப்படுகிறது. OIS வசதியுடன் கூடிய,  50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா,  8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா, மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் லென்ஸுடன் கூடிய 13-மெகாபிக்சல் கேமரா உள்ளன. 

ஒன்பிளஸ் 11

அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒன்பிளஸ் பிரியர்களுக்காக இந்த விவரங்கள் வெளிவந்துள்ளது. OnePlus 10 Pro போலவே இதிலும் கேமரா அமைப்பு இருக்கலாம். குவால்காமின் டாப் நாட்ச் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 SoC பிராசசர் பயன்படுத்த இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்துள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios