Asianet News TamilAsianet News Tamil

Samsung Galaxy S22 : கேலக்ஸி எஸ்22 சீரிஸ் விலை இவ்வளவா? இணையத்தில் லீக் ஆன தகவல்

சாம்சங் நிறுவனம் பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்ய இருக்கும் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள் வெளியாகி உள்ளது.

Samsung Galaxy S22 Series Price in US Leaked, Tipped to Launch on February 8
Author
Tamil Nadu, First Published Jan 25, 2022, 4:45 PM IST

சாம்சங்  நிறுவனம் இந்த ஆண்டிற்கான முதல் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வை பிப்ரவரி 9 ஆம் தேதி நடத்த இருப்பதாக சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது. இந்த வரிசையில், தற்போது கேலக்ஸி எஸ்22 சீரிஸ் விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. 

கேலக்ஸி எஸ்22 சீரிஸ் விலை முந்தைய எஸ்21 சீரிசை விட சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. சர்வசதேச சந்தையில் சிப்செட் குறைபாடு ஏற்பட்டு இருப்பது மட்டுமின்றி பல்வேறு இதர காரணங்களால் ஸ்மார்ட்போன் விலை அதிகமாக நிர்ணயம்  செய்யப்படலாம் என தெரிகிறது.

சாம்சங் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் கேலக்ஸி எஸ்22 மாடலின் விலை 849 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 71,801 துவங்கும் என கூறப்படுகிறது. கேலக்ஸி எஸ்22 பிளஸ் விலை 1049 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 88,716 என்றும் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா விலை 1249 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 1,05,630 என்றும் நிர்ணயம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 

Samsung Galaxy S22 Series Price in US Leaked, Tipped to Launch on February 8

விலை விவரங்கள்

கேலக்ஸி எஸ்22 8/128GB 849 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 71,619
கேலக்ஸி எஸ்22 8/256GB 899 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 75,837
கேலக்ஸி எஸ்22 பிளஸ் 8/128GB 1049 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 88,419  
கேலக்ஸி எஸ்22 பிளஸ் 8/256GB 1099 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 92,709
கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 8/256GB 1249 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,05,363
கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 12/256GB 1349 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,13,798

அம்சங்களை பொருத்தவரை புதிய கேலக்ஸி  எஸ்22 சீரிஸ் மாடல்களில் 6.8 இன்ச் வளைந்த குவாட் HD பிளஸ் 120Hz ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன், எக்சைனோஸ் 2200 அல்லது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது.

இத்துடன் 12GB+256GB,12GB+512GB மற்றும் 16GB+1TB போன்ற மெமரி ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 108MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 10MP 3x டெலிபோட்டோ லென்ஸ், 10MP 10x டெலிபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 5000mAh பேட்டரி, 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வை சாம்சங் நடத்தி வருகிறது. இந்த நிகழ்வில் சாம்சங் தனது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு துவங்குகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios