அம்மாடியோவ்! ஐந்து கேமராக்களுடன் அறிமுகமாகும் அட்டகாசமான ஸ்மார்ட் போன்! எந்த நிறுவனம் தயாரிக்கிறது தெரியுமா?
சாம்சங் நிறுவனம் புதியதாக அறிமுகம் செய்ய உள்ள கேலக்ஸி எஸ்10 ப்ளஸ் ரக ஸ்மார்ட்ஃபோன் 5 கேமிரா பொருத்தப்பட்டதாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தென்கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம், சர்வதேச சந்தையில் ஸ்மார்ட்ஃபோன் விற்பனையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக பல ஸ்மார்ட்ஃபோன்களை சாம்சங் வெளியிட்டு வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனங்கள் சாம்சங் நிறுவனத்திற்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. குறிப்பாக, ஸியோமி, லெனோவா, இன்ஃபினிக்ஸ் போன்ற பல ஸ்மார்ட்ஃபோன் நிறுவனங்களின் வருகையால் ஸ்மார்ட்ஃபோன் விலை இந்திய சந்தையில் குறைந்துள்ளது. சமீபத்தில், சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்9 , கேலக்ஸி எஸ்9 ப்ளஸ் ஆகிய ஸ்மார்ட்ஃபோன்களை அறிமுகம் செய்திருந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்ஃபோன்களுக்கு, வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு நிலவுகிறது.
இந்நிலையில், கேலக்ஸி எஸ் 10 ப்ளஸ் என்ற புதிய ஸ்மார்ட்ஃபோனை விரைவில் சாம்சங் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பில் புது முயற்சியாக, 5 கேமிராக்கள் பொருத்தப்பட்டதாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வகை ஸ்மார்ட்ஃபோனில் மொத்தம் 3 ரகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, முதல் ரகத்தைச் சேர்ந்த கேலக்ஸி எஸ் 10 ப்ளஸ் 3 கேமிராக்கள் பின்புறமும், 2 கேமிராக்கள் முன்புறமும் கொண்டதாக தயாரிக்கப்படும் என்று சாம்சங் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதேபோல, 2வது ரகத்தைச் சேர்ந்த எஸ்10 ப்ளஸ் ஸ்மார்ட்ஃபோனில், முன்புறம் ஒரு செல்ஃபி கேமிரா, பின்புறம் 3 கேமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். மேலும், 3வது ரக எஸ்10 ப்ளஸ் ஸ்மார்ட்ஃபோனில், முன்புறம் ஒரு செல்ஃபி கேமிராவும், பின்புறம் 2 கேமிராவும் பொருத்தப்படும் என்று சாம்சங் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.பொதுவான அம்சமாக, இந்த கேலக்ஸி எஸ்10 ப்ளஸ் ஸ்மார்ட்ஃபோன், எக்ஸினாஸ் 9820, மாலி ஜி76 ஜிபியு (7 நேனோ மீட்டர் ஃபேப்ரிக்) ஆகியவற்றில் இயங்குபவையாக வடிவமைக்கப்பட உள்ளது. மிக துல்லியமான ஸ்மார்ட்ஃபோன் சேவை கிடைக்கும் என்றும், இந்த ஸ்மார்ட்ஃபோனின் கேமிராக்கள் 120 டிகிரி கோணம் வரை விரிவான புகைப்படங்கள், வீடியோ எடுக்கும் திறன் கொண்டவை என்றும், சாம்சங் தரப்பில் குறிப்பிடப்படுகிறது.