Samsung Galaxy M05 | ரூ.7,999 க்கு 50 எம்பி கேமராவுடன் சாம்சங் போன்; நன்மைகள், தீமைகள் என்ன?

சாம்சங் கேலக்ஸி பட்ஜெட் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் வரிசையில் அடுத்தது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

Samsung Galaxy M05 with 50MP camera for Rs 7999

டெல்லி: பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரிவில் போட்டியிட சாம்சங்கின் கேலக்ஸி எம்05 (Galaxy M05) இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 50 மெகாபிக்சல் பிரதான கேமராவைக் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை வெறும் ரூ.7,999 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், 5ஜி உள்ளிட்ட சில குறைபாடுகளும் இந்த ஸ்மார்ட்போன் மாடலில் உள்ளன. 

சாம்சங் கேலக்ஸி பட்ஜெட் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் வரிசையில் அடுத்தது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேலக்ஸி எம் சீரிஸில் எம்05 ஆனது புதிய ஐட்டம். 6.7 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேவில் எச்டி+ தெளிவுத்திறன் கொண்டது. மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட்டில் கேலக்ஸி எம்05 தயாரிக்கப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஒரே ஒரு வேரியண்ட் மட்டுமே இந்த போனில் உள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டைப் பயன்படுத்தி 1 டிபி வரை ஸ்டோரேஜை அதிகரிக்கலாம். 4ஜி வரை மட்டுமே நெட்வொர்க் இணைப்பு இருப்பது இதன் குறைபாடு. அதே நேரத்தில் இரட்டை 4G VoLTE போனில் சப்போர்ட் செய்யும். 

அதிக நேர பேட்டரி சார்ஜுடன் குறைந்த விலையில் டேப்லெட் Realme Pad 2 Lite!

ஒன்யுஐ அடிப்படையிலான ஆண்ட்ராய்டு தளத்திலேயே கேலக்ஸி எம்05 உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் இலவச ஓஎஸ் அப்டேட்டையும், நான்கு ஆண்டுகள் பாதுகாப்பு பேட்சையும் நிறுவனம் உறுதியளிக்கிறது. 25 வாட்ஸ் வயர்டு சார்ஜருடன் 5,000 எம்ஏஎச் பேட்டரி வருகிறது. இருப்பினும், சார்ஜர் போனுடன் வராது. கைரேகை ஸ்கேனர் இல்லாததும் கேலக்ஸி எம்05 இன் ஒரு குறைபாடாகும். பின்புறத்தில் 50 எம்பி பிரதான கேமராவும், 2 எம்பி டெப்த் சென்சாரும் இடம்பெற்றுள்ளன. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 8 எம்பி முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் உடலில் தயாரிக்கப்பட்ட இந்த போன் 8.8 மிமீ தடிமன் மற்றும் 193 கிராம் எடை கொண்டது. 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக்கும் போனில் உள்ளது. 

மிண்ட் கிரீன் நிறத்தில் மட்டுமே வரும் கேலக்ஸி எம்05 சாம்சங் இந்தியா இணையதளம், அமேசான், தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் ரூ.7,999 க்கு வாங்கலாம். 

தர ரேட்டுக்கு Airtel அறிவித்து இருக்கும் செம ஆபர் - முழு விவரம்!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios