Asianet News TamilAsianet News Tamil

Samsung Galaxy M04 விற்பனைக்கு வந்தது! ஆஃபர் விவரங்கள், சிறப்பம்சங்கள் இதோ!!

Samsung இன் புதிய Galaxy M04 ஸ்மார்ட்போன் நேற்று டிசம்பர் 16 முதல் விற்பனைக்கு வந்தது.  இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி, MediaTek Helio P35 பிராசசர் மற்றும் விரிவாக்கக்கூடிய ரேம் ஆப்ஷன் வழங்குகிறது.

Samsung Galaxy M04 goes on sale in India, priced under Rs 10,000: specs details here
Author
First Published Dec 19, 2022, 9:10 AM IST

Samsung இன் புதிய Galaxy M04 ஸ்மார்ட்போன் நேற்று டிசம்பர் 16 முதல் விற்பனைக்கு வந்தது.  இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி, MediaTek Helio P35 பிராசசர் மற்றும் விரிவாக்கக்கூடிய ரேம் ஆப்ஷன் வழங்குகிறது.

சாம்சங்கின் சமீபத்திய M சீரிஸ் ஸ்மார்ட்போன் Samsung Galaxy M04 இன்று முதல் விற்பனைக்கு கிடைக்கிறது. இதில் ஃபேஸ் அன்லாக், மீடியாடெக் ஹீலியோ பி35பிராசசர், எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் 8ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ரேம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

ரூ. 9499 இல் தொடங்கும் விலையில், புதிய M சீரிஸ் ஸ்மார்ட்போனானது நீண்ட கால மென்பொருள் வசதியுடன், பட்ஜெட் போனை விரும்பும் பயனர்களை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் Samsung Galaxy M04 விலை:

Samsung Galaxy M04 இந்தியாவில் இரண்டு வகைகளில் கிடைக்கிறது. அடிப்படை மாடல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பகத்துடன் ரூ.9499 விலையில் விற்கப்படுகிறது. இரண்டாவது மாடலானது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் ரூ.10499 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. 

சாம்சங் சில அறிமுக சலுகைகளையும் அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கும் 1000 ரூபாய் உடனடி தள்ளுபடியை வழங்குகிறது. இரண்டு வண்ணங்களில் வருகிறது - வெளிர் பச்சை மற்றும் அடர் நீலம்.

Samsung Galaxy M04 பல ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது -- Samsung.com, Amazon.in மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் டிசம்பர் 16 முதல் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

Samsung Galaxy M04 அம்சங்கள்:

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Samsung Galaxy M04 ஆனது 90Hz ரெப்ரெஷ் ரேட்டுடன் 6.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. பேனல் HD+ தெளிவுத்திறனை வழங்குகிறது மற்றும் அதில் செல்ஃபி கேமரா, வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச் உள்ளது. முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் கேமரா, பின்புறத்தில் 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் கூடுதல் கேமரா உள்ளன.

மீடியாடெக் ஹீலியோ P35 பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது, மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 8ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ரேம் மற்றும் 1TB வரை விரிவாக்கக்கூடிய 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 தளத்தில் போன் இயங்குகறிது. நான்கு வருட செக்யூரிட்டி அப்டேட்டுகள் மற்றும் இரண்டு OS அப்டேட்டுகள் கிடைக்கும் என்று சாம்சங் தெரிவித்துள்ளது.

மற்றபடி, வழக்கம் போல் 15W பாஸ்ட் சார்ஜிங் வசதி, 5000mAh பேட்டரி, 4ஜி, VoLTE, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் ஜிபிஎஸ் ஆகியவை உள்ளன. பாதுகாப்பிற்காக, ஃபோனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதிகள் உள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios