Samsung Galaxy A53 5G : பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன்கள் - மாஸ் காட்டிய சாம்சங்!
Samsung Galaxy A53 5G : சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இரண்டு புதிய A சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது.
சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி கேலக்ஸி A33 5ஜி மற்றும் கேலக்ஸி A53 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை தனது கேலக்ஸி A நிகழ்வில் அறிமுகம் செய்தது. இரு ஸ்மார்ட்போன்களில் கேலக்ஸி A53 5ஜி அந்நிறுவனம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்த கேலக்ஸி A52 5ஜி மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். கேலக்ஸி A33 5ஜி மாடல் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி A32 5ஜி ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
இரண்டு புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களிலும் குவாட் கேமரா சென்சார்கள், ஆக்டா கோர்பிராசஸர்கள், 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களுக்கும் நான்கு தலைமுறை ஒன் யு.ஐ. மற்றும் ஆண்ட்ராய்டு ஓ.எஸ்., ஐந்து ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை வழங்குவதாக சாம்சங் அறிவித்து இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களின் மிகப்பெரும் வித்தியாசமாக கேலக்ஸி A53 5ஜி மாடலில் பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது.
கேலக்ஸி A33 5ஜி அம்சங்கள்
- 6.4 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் சூப்பர் AMOLED, இன்ஃபினிட்டி யு 90Hz டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
- ஆக்டா கோர் எக்சைனோஸ் 1280 பிராசஸர்
- மாலி-G68 GPU
- 6GB ரேம், 128GB மெமரி
- 8GB ரேம், 256GB மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. 4.1
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 48MP பிரைமரி கேமரா
- 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா
- 2MP டெப்த் சென்சார்
- 5MP மேக்ரோ கேமரா
- 13MP செல்ஃபி கேமரா
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- சாம்சங் பே
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
- வாட்டர் ரெசிஸ்டண்ட்
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி A53 5ஜி அம்சங்கள்
- 6.5 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் சூப்பர் AMOLED, இன்ஃபினிட்டி ஒ 120Hz டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
- ஆக்டா கோர் எக்சைனோஸ் 1280 பிராசஸர்
- மாலி-G68 GPU
- 6GB ரேம், 128GB மெமரி
- 8GB ரேம், 256GB மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. 4.1
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 64MP பிரைமரி கேமரா
- 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா
- 5MP டெப்த் சென்சார்
- 5MP மேக்ரோ கேமரா
- 32MP செல்ஃபி கேமரா
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- சாம்சங் பே
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
- வாட்டர் ரெசிஸ்டண்ட்
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி A33 5ஜி ஸ்மார்ட்போனின் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை 408 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 31 ஆயிரம் என துவங்குகிறது. சாம்சங் கேலக்ஸி A53 5ஜி ஸ்மாப்ட்போனின் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை 449.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 34 ஆயிரத்து 160 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய சாம்சங் கேல்கஸி A53 5ஜி மற்றும் கேலக்ஸி A33 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்கள் பிளாக், வைட், பீச் மற்றும் புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
சர்வதேச சந்தையில் சாம்சங் கேலக்ஸி A53 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை ஏப்ரல் 1 ஆம் தேதியும் கேலக்ஸி A33 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை ஏப்ரல் 22 ஆம் தேதியும் துவங்க இருக்கிறது. இரு சாம்சங் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.