Royal Enfield: விரைவில் புது பைக்கை அறிமுகப்படுத்தும் ராயல் என்பீல்டு.... அதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா?
‘ஸ்கிராம் 411’ மாடலை தொடர்ந்து மேலும் சில புதிய மாடல் பைக்குகளை 2022-ம் ஆண்டில் அறிமுகம் செய்ய ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறதாம்.
முன்னணி பைக் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்பீல்டு, அடுத்த சில மாதங்களில் பல்வேறு புது பைக் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அடுத்த மாடல் ஹிமாலயன் அட்வெஞ்சர் பைக்கை தழுவி உருவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புது மாடல் பைக்கின் விலை சற்று குறைந்தே இருக்கும் என கூறப்படுகிறது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய பைக் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய மாடல் பைக் ‘ஸ்கிராம் 411’ எனும் பெயரில் அறிமுகமாகும் எனவும் கூறப்படுகிறது.
‘ஸ்கிராம் 411’ மாடலை தொடர்ந்து மேலும் சில புதிய மாடல் பைக்குகளை 2022-ம் ஆண்டில் அறிமுகம் செய்ய ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறதாம். ஹிமாலயன் அட்வெஞ்சர் பைக்கில் ஸ்பிலிட் சீட் மற்றும் பெரிய வீல்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
ஆனால் தற்போது அதைத் தழுவி உருவாகி இருக்கும் ‘ஸ்கிராம் 411’ மாடல் பைக் சிங்கிள் சீட் மற்றும் ஹிமாலயன் அட்வெஞ்சரை விட சிறிய வீல்களுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதன் விலையும் ஹிமாலயன் அட்வெஞ்சர் பைக்கின் விலையை விட குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.