Rolls Royce EV: எலெக்ட்ரிக் கார் டெஸ்டிங் - மாஸ் அப்டேட் கொடுத்த ரோல்ஸ் ராய்ஸ்

Rolls Royce EV: ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் பிரீ-ப்ரோடக்‌ஷன் டெஸ்ட்களில் 25 சதவீதம் தற்போது நிறைவு பெற்று இருப்பதாக ரோல்ஸ் ராய்ஸ் தெரிவித்து உள்ளது.

Rolls Royce Spectre EV concludes winter testing

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் ஸ்பெக்டர் எனும் பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது. இது ஃபேண்டம் கூப் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். முன்னதாக புதிய ஆடம்பர எலெக்ட்ரிக் கார் மாடலின் விண்டர் டெஸ்டிங்கை மேற்கொண்டு ரோல்ஸ் ராய்ஸ், அதுபற்றிய புது அப்டேட் கொடுத்து இருக்கிறது. அதன்படி ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் மாடல் விண்டர் டெஸ்டிங் வெற்றிகரமாக நிறைவு பெற்று இருப்பதாக ரோல்ஸ் ராய்ஸ் அறிவித்து இருக்கிறது.

விண்டர் டெஸ்டிங்:

மேலும் புதிய ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் பிரீ-ப்ரோடக்‌ஷன் டெஸ்ட்களில் 25 சதவீதம் தற்போது நிறைவு பெற்று இருப்பதாக ரோல்ஸ் ராய்ஸ் தெரிவித்து உள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் உருவாக்கும் ஒவ்வொரு கார் மாடலிலும் முதலில் விண்டர் டெஸ்டிங் தான் நடத்தப்படும். இந்த டெஸ்டிங் ஸ்வீடனில் உள்ள பி.எம்.டபிள்யூ. ஆலையில் நடத்தப்பட்டது. இந்த பகுதியின் வெப்பநிலை -26 டிகிரியில் இருந்து -40 டிகிரி வரை இருக்கும். 

எந்த விதமான வெளிப்புற சூழல்களிலும் அனைத்து சிஸ்டம்களும் மிக சீராக இயங்குகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவே இந்த டெஸ்டிங் நடத்தப்படுகிறது. ப்ரோடக்‌ஷன் தொடங்கும் முன் இந்த கார் மாடல் சுமார் 25 லட்சம் கிலோமீட்டர்களுக்கு சோதனை செய்யப்பட இருப்பதாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது. 

Rolls Royce Spectre EV concludes winter testing

ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர்:

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையுடன் உருவாகி வரும் ஸ்பெக்டர் அந்நிறுவனத்தின் ஆர்கிடெக்ச்சர் ஆஃப் லக்சரி - அலுமினியம் ஸ்பேஸ்-ஃபிரேம் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு வருகிறது. அளவில் இந்த மாடல் ரோல்ஸ் ராய்ஸ் ஃபேண்டம் கூப் போன்ற இருக்கும். இதன் எடை 700 கிலோ ஆகும். 

முதல் எலெக்ட்ரிக் கார் மாடலில் வழங்குவதற்காக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் ஏற்கனவே புதிய ஸ்பிரிட் ஆஃப் எக்டசியை அறிமுகம் செய்து விட்டது. இது முந்தைய எக்டசியை விட அதிகளவு ஏரோடைனமிக் டியூனிங் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் முதல் முறையாக 23 இன்ச் வீல்களை பெறும் கூப் மாடலாக இது உருவாகி இருக்கிறது.

எலெக்ட்ரிக் ரோல்ஸ் ராய்ஸ்:

புதிய ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடலை தொடர்ந்து கலினன் எஸ்.யு.வி., கோஸ்ட் சலூன் மற்றும் ஃபேண்டம் லிமோசின் போன்ற மாடல்களையும் முழுமையான எலெக்ட்ரிக் திறனுடன் அறிமுகம் செய்ய ரோல்ஸ் ராய்ஸ் முடிவு செய்து இருக்கிறது. இது மட்டும் இன்றி 2030 ஆண்டிற்குள் அனைத்து மாடல்களிலும் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்யவும் ரோல்ஸ் ராய்ஸ் இலக்கு நிர்ணயித்து உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios