சியோமி நிறுவனம் அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருக்கும் ரெட்மி நோட் 11 சீரிஸ் மாடல்களின் இந்திய விலை விவரங்கள் வெளியாகி உள்ளது.

சியோமி நிறுவனம் பிப்ரவரி 9 ஆம் தேதி ரெட்மி நோட் 11S ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதே நிகழ்வில் ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இரு மாடல்களின் இந்திய விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதன்படி இந்தியாவில் ரெட்மி நோட் 11S ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ. 16,999 அல்லது ரூ. 17,499 என துவங்கும். ரெட்மி நோட் 11 மாடலின் விலை ரூ. 13,999 அல்லது ரூ. 14,499 என துவங்கும் என கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் முந்தைய ரெட்மி நோட் 10 மற்றும் ரெட்மி நோட் 10S மாடல்களின் விலையை விட இது அதிகம் ஆகும். இரு மாடல்களின் விலையும் ரூ. 11,999 மற்றும் ரூ. 14,999 என நிர்ணயம் செய்யப்பட்டது. 

அம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 11S மாடலில் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.43 இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி96 பிராசஸர், 108MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2 MP மேக்ரோ கேமரா, 2MP லென்ஸ், 16MP செல்ஃபி கேமரா, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 11 சார்ந்த MIUI13, 5000mAh பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படலாம்.

ரெட்மி நோட் 11 மாடலில் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.43 இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 2MP லென்ஸ், 13MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 11 சார்ந்த MIUI13, 5000mAh பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என தெரிகிறது.