சூப்பர் அம்சங்களுடன் உருவாகும் ரெட்மி 5ஜி போன் - இணையத்தில் லீக் ஆன புது விவரங்கள்

சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி நோட் 11S 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. 

Redmi Note 11S 5G spotted on FCC certifications with key specifications

சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி நோட் 11S 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் FCC வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. சியோமி நிறுவனம் ஏற்கனவே ரெட்மி நோட் 11, ரெட்மி நோட் 11S, ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி போன்ற ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

ரெட்மி நோட் 11S மாடல் போக்கோ சமீபத்தில் அறிமுகம் செய்த போக்கோ M4 ப்ரோ 5ஜி மாடலாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்போது FCC லிஸ்டிங்கில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ரெட்மி நோட் 11S மாடல் 4GB ரேம், 64GB மெமரி, 4GB ரேம்,  128GB மெமரி, 6GB ரேம், 64GB மெமரி மற்றும் 6GB ரேம், 128GB மெமரி மாடல்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

Redmi Note 11S 5G spotted on FCC certifications with key specifications

இதே ஸ்மார்ட்போன் விவரங்கள் IMEI வலைதளத்திலும் இடம்பெற்று இருந்தது. லிஸ்டிங்கில் இந்த ஸ்மார்ட்போனின் பெயர் ரெட்மி நோட் 11S 5ஜி என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதே ஸ்மார்ட்போன் K16B எனும் மாடல் நம்பரில் உருவாகி வருவதாக ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது. 

அம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 11S 5ஜி மாடலில் 6.6 இன்ச் 1080x2400 பிக்சல் LCD டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர் வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மூன்றாவது கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios