Redmi 10: சில்லறை விற்பனை மையங்களில் வாங்குவோர் மாத தவணை முறை அல்லது எக்சேன்ஜ் ஆஃபர்களை பெற முடியும். Mi எக்சேன்ஜ் திட்டத்தின் கீழ் சியோமி நிறுவனம் ரூ. 9 ஆயிரத்து 500 வரை தள்ளுபடி வழங்குகிறது.

சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி 10 ஸ்மார்ட்போன் விற்பனை இன்று (மார்ச் 24) மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 10 ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் ரக நாட்ச் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், அதிகபட்சம் 6GB ரேம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

விலை மற்றும் அறிமுக சலுகை விவரங்கள்:

இந்திய சந்தையில் ரெட்மி 10 மாடலின் 4GB ரேம், 64GB மெமரி மாடல் விலை ரூ. 10 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கரீபியன் கிரீன், மிட்நைட் பிளாக் மற்றும் பசிபிக் புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. புதிய ரெட்மி 10 விற்பனை ப்ளிப்கார்ட், Mi வலைதளம், Mi ஹோம் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஆஃப்லைன் விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.

- புதிய ரெட்மி 10 ஸ்மார்ட்போனை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போதும், மாத தவணையில் வாங்கும் போதும் சியோமி மற்றும் ப்ளிப்கார்ட் சார்பில் ரூ. 1000 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

- சில்லறை விற்பனை மையங்களில் வாங்குவோர் மாத தவணை முறை அல்லது எக்சேன்ஜ் ஆஃபர்களை பெற முடியும். Mi எக்சேன்ஜ் திட்டத்தின் கீழ் சியோமி நிறுவனம் ரூ. 9 ஆயிரத்து 500 வரை தள்ளுபடி வழங்குகிறது. 

ரெட்மி 10 சிறப்பம்சங்கள்:

- 6.71 இன்ச் 1600x720 பிக்சல் HD+ டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 4GB LPDDR4X ரேம், 64 GB UFS 2.2 மெமரி
- 6GB LPDDR4X ரேம், 128GB UFS 2.2 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 13
- டூயல் சிம் ஸ்லாட்
- 50MP பிரைமரி கேமரா, f/1.8
- 2MP டெப்த் கேமரா, f/2.4
- 5MP செல்ஃபி கேமரா
- பின்புறம் கைரேகைசென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், FM ரேடியோ 
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப் சி
- 6000mAh பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்