இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் 5000mAh பேட்டரி, 18 வாட் சார்ஜிங், யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் நார்சோ 50A பிரைம் ஸ்மார்ட்போனினை ஏற்கனவே சொன்னப்படி அறிமுகம் செய்தது. இது நார்சோ பிராண்டில் அறிமுகமாகி இருக்கும் புது ஸ்மார்ட்போன் ஆகும். சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி நார்சோ 50A பிரைம் மாடலில் 6.6 இன்ச் FHD+ ஸ்கிரீன், யுனிசாக் T612 பிராசஸர், 4GB ரேம், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். மற்றும் ரியல்மி U1 R எடிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 2MP பிளாக் அண்ட் வைட் சென்சார், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் 5000mAh பேட்டரி, 18 வாட் சார்ஜிங், யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி நார்டோ 50A பிரைம் அம்சங்கள்:

- 6.6 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
- ஆக்டா கோர் யுனிசாக் T612 பிராசஸர்
- மாலி G57 GPU
- 4GB LPDDR4x ரேம்
- 64GB / 128GB UFS 2,2 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி U1 R எடின்
- டூயல் சிம் ஸ்லாட் 
- 50MP பிரைமரி கேமரா, f/1.8 
- 2MP மேக்ரோ கேமரா
- வி.ஜி.ஏ. கேமரா, f/2.4
- 8MP செல்ஃபி கேமரா, f/2.45
- 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் 

புதிய ரியல்மி நார்சோ 50A பிரைம் ஸ்மார்ட்போன் பிளாஷ் பிளாக் மற்றும் பிளாஷ் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4GB ரேம், 64GB மெமரி மாடல் விலை ரூ. 11 ஆயிரத்து 499 என்றும் 4GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 499 என துவங்குகிறது.