150 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் - வேற லெவல் அப்டேட் கொடுக்க தயாராகும் ரியல்மி!

ரியல்மி நிறுவனம் புதிய ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை இம்மாத இறுதியில் அறிமுகம் செய்ய இருக்கிறது. 

realme could announce 150W fast charging tech at MWC 2022 on Feb 28

ரியல்மி நிறுவனம் சில தினங்களுக்கு முன் “Greater Than You See” நிகழ்வு பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. இதன் மூலம் பிப்ரவரி 28 இல் நடைபெறும் MWC 2022-இல் பங்கேற்பை ரியல்மி உறுதிப்படுத்தி இருக்கிறது. இதற்கான டீசரில் சார்ஜிங் கேபிள் ஒன்றின் படமும், ரியல்மி டார்ட் சார்ஜ் சின்னமும் இடம்பெற்று இருக்கிறது. 

இந்த நிலையில், 80 வாட் மற்றும் 150 வாட் சூப்பர்ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ரியல்மி நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக 2020 வாக்கில் ரியல்மி 125 வாட் அல்ட்ரா டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. கடந்த ஆண்டு  இத்தகைய திறன் கொண்ட ஸ்மார்ட்போனினை 2022 வாக்கில் அறிமுகம் செய்வதாக ரிய்லமி அறிவித்து இருந்தது.

realme could announce 150W fast charging tech at MWC 2022 on Feb 28

ரியல்மி சமீபத்தில் அறிமுகம் செய்த GT 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் 65 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 150 வாட் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன் ஒப்போ பயன்படுத்துவதை போன்றே 160 வாட் சார்ஜரை பயன்படுத்தும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த சார்ஜர் பற்றிய அறிவிப்பும் MWC நிகழ்வில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி, ஒப்போ மட்டுமின்றி சியோமி, ஐகூ என பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த துவங்கி இருக்கின்றன. இதுதவிர அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ரெட் மேஜிக் 7 மாடலிலும் 165 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிறுவனம் 135 வாட் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜிங் வசதி வழங்குவதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

இதற்காக 165 வாட் GaN சார்ஜ் பயன்படுத்த இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் 5000mAh பேட்டரியை 15 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும். முன்னதாக மாற்றம் செய்யப்பட்ட ரியல்மி யு.ஐ. 3.0 அப்டேட்  சைக்கிள் விவரங்களை MWC நிகழ்வில் அறிவிப்பதாக ரியல்மி நிறுவனத்தின் மூத்த அதிகாரி பிரான்சிஸ் வொங் தெரிவித்தார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios