Asianet News TamilAsianet News Tamil

Realme C31 : குறைந்த விலை, வேற லெவல் அம்சங்களுடன் புது ஸ்மார்ட்போன் அறிமுகம்.. ரியல்மி அதிரடி..!

Realme C31 : புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் 8.4mm மெல்லிய டிசைன், டைனமிக் டெக்ஸ்ச்சர் டிசைன், 5000mAh பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

realme C31 with 5000mAh battery launched in India
Author
India, First Published Mar 31, 2022, 4:38 PM IST

ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய C31 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 6.6 இன்ச் HD+ LCD ஸ்கிரீன், யுனிசாக் T612 பிராசஸர், அதிகபட்சம் 4GB ரேம், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., 13MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ மற்றும் VGA டெப்த் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. 

புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் 8.4mm மெல்லிய டிசைன், டைனமிக் டெக்ஸ்ச்சர் டிசைன், 5000mAh பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் TUV ரெயின்லாந்து சான்றிதழ் பெற்று இருக்கிறது. 

realme C31 with 5000mAh battery launched in India

ரியல்மி C31 அம்சங்கள்:

- 6.52 இன்ச் 1600x720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன்
- 1.82 GHz UNISOC T612 ஆக்டா கோர் பிராசஸர்
- மாலி-G57 GPU
- 3GB LPDDR4X ரேம், 32GB UFS 2.2 மெமரி
- 4GB LPDDR4X ரேம், 64GB UFS 2.2 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யு.ஐ. ஆர் எடிஷன்
- 13MP பிரைமரி கேமரா, f/2.2
- 2MP மேக்ரோ கேமரா, f/2.4
- VGA B&W போர்டிரெயிட் சென்சார், f/2.8
- 5MP செல்ஃபி கேமரா, f/2.2
- 3.5mm ஆடியோ ஜாக், FM ரேடியோ
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 4G வோல்ட்இ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.0
- மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட்
- 5,000mAh பேட்டரி 
- 10 வாட் சார்ஜிங் 

புதிய ரியல்மி C31 ஸ்மார்ட்போன் லைட் சில்வர் மற்றும் டார்க் கிரீன் என இரண்டு விதமான நிறங்களில் கிடைகத்கிறது. இதன் 3GB ரேம், 32GB மெமரி மாடல் விலை ரூ. 8 ஆயிரத்து 999 என்றும் 4GB ரேம், 64GB மெமரி மாடல் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ரியல்மி C31 ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட், ஆஃப்லைன் விற்பனை மையங்களில் ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

realme C31 with 5000mAh battery launched in India

"உலகம் முழுக்க ரியல்மி வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப் படும் மாடலாக ரியல்மி சி சீரிஸ் இருக்கிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் தட்டுப்பாடை எதிர்கொள்ளும் வகையிலும், வாடிக்கையாளர்களுக்கு மேலும் அதிக ஆப்ஷன்களை குறைந்த விலை பிரிவில் வழங்கும் நோக்கில், ரியல்மி C31 ஸ்மார்ட்போனினை சக்தி வாய்ந்த சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்."

"எங்களின் புதிய ரியல்மி C31 ஸ்மார்ட்போன் இதுவரை வெளியான C சீரிஸ் மாடல்களில் மிகவும் ஸ்டைலிஷ் எண்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் ஆகும். இது பயனர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில்  உருவாக்கப்பட்டு இருக்கிறது. பல்வேறு விலை பிரிவுகளிலும் அதிக அம்சங்களை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்," என ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios