ரூ. 7 ஆயிரம் பட்ஜெட்டில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம்.. மாஸ் காட்டிய ரியல்மி..! 

ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்றே இந்திய சந்தையில் புதிய ரியல்மி C30 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.

realme C30 with Unisoc T612 SoC, 5000mAh battery launched in India

ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய C30 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், புதிய ரியல்மி C30 ஸ்மார்ட்போனில் 6.5 இனஅச் HD+ LCD ஸ்கிரீன், 60Hz ரிப்ரெஷ் ரேட், 120Hz டச் சேம்ப்லிங் ரேட், யுனிசாக் T612 பிராசஸர், அதிகபட்சம் 3GB ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ரியல்மி UI கோ எடிஷன் கொண்டு இருக்கும் ரியல்மி C30 ஸ்மார்ட்போன் 8MP பிரைமரி கேமரா, 5MP செல்பி கேமரா கொண்டு இருக்கிறது.

8.5mm அளவில் மிக மெல்லிய பாடி கொண்டிருக்கும் ரியல்மி C30 ஸ்மார்ட்போன் வெர்டிகல் ஸ்டிரைப் டிசைன் வழங்கப்பட்டு உள்ளது. புதிய ரியல்மி C30 ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் TÜV ரெயின்லாந்து ஸ்மார்ட்போன் ஹை ரிலையபிலிட்டி சான்று பெற்று இருக்கிறது.

realme C30 with Unisoc T612 SoC, 5000mAh battery launched in India

ரியல்மி C30 அம்சங்கள்:

- 6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன், 120Hz டச் சாம்ப்லிங் ரேட்
- 1.82 GHz UNISOC T612 ஆக்டா கோர் 12nm பிராசஸர்
- மாலி-G57 GPU
- 2GB / 3GB LPDDR4X ரேம்
- 32GB UFS 2.2 ஸ்டோரேஜ்
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட் 
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி ஓ.எஸ்.
- 8MP பிரைமரி கேமரா, f/2.0, LED ஃபிளாஷ்
- 5MP செல்பி கேமரா, f/2.2
- 3.5mm ஆடியோ ஜாக்
- பக்க வாட்டில் கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, டூயல் 4ஜி வோல்ட்இ, வை-பை 802.11 b/g/n, ப்ளூடூத் 5.0
- மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட்
- 5,000 mAh பேட்டரி
- 10W சார்ஜிங் 

ரியல்மி C30 ஸ்மார்ட்போன் லேக் புளூ, பாம்பூ கிரீன் மற்றும் டெனிம் பிளாக் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2GB ரேம், 32GB மெமரி மாடல் விலை ரூ. 7 ஆயிரத்து 499 என்றும் 3GB ரேம், 32GB மெமரி மாடல் விலை ரூ. 8 ஆயிரத்து 299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ரியல்மி C30 ஸ்மார்ட்போன் ரியல்மி, ப்ளிப்கார்ட் வலைதளங்கள் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் ஜூன் 27 ஆம் தேதி துவங்குகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios