Asianet News TamilAsianet News Tamil

Realme 10 Pro+ ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் வெளியானது!

இந்தியாவில் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி Realme 10 Pro+  ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் விலை விவரங்கள் கிடைத்துள்ளன.

Realme 10 Pro+ price revealed to be under Rs 25,000 in India; check all specifications here
Author
First Published Nov 29, 2022, 2:40 PM IST

ரியல்மி பிரியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த Realme 10 Pro+  வரும் டிசம்பர் 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. இதற்கு முன்பு வெளியான ரியல்மி போனின் வெற்றியைத் தொடர்ந்து, Realme 10 Pro+ ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.   

இந்த நிலையில், ரியல்மியின் துணைத்தலைவர் மாதவ் சேத் தனது டுவிட்டர் பக்கத்தில் ரியல்மி 10 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போன் குறித்து வேடிக்கையான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வரவிருக்கும் Realme 10 Pro+ ஸ்மார்ட்போனை 25 ஆயிரம் ரூபாய்க்குள் கொண்டு வருவதற்கு படாதபாடு படுவதாக மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, போனின் விலை 25 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கும் என்று தெரியவந்துள்ளது. மேலும், வளைந்த முனையுடன் பிரீமியம் தோற்றத்தில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

 

 

Realme 10 Pro+ 5G ஸ்மார்ட்போனானது 6.7 இன்ச் வளைந்த OLED Full-HD+ டிஸ்ப்ளேவுடன் 120Hz ரெவ்ரெஷ் ரேட், 800 nits நல்ல பிரைட்னஸ், HDR10+ அம்சத்துடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இதில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1080 பிராசசர் இருக்கலாம் என்றும், 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

OnePlus ஸ்மார்ட்போனுக்கு 5 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி!

Realme 10 Pro+ போனின் பின்புறத்தில் 108MP மெகா பிக்சல் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பு இருக்கலாம். முன்பக்கத்தில் செல்ஃபி கேமரா 16 மெகா பிக்சலுடன் இருக்கலாம்.  5000mAh பேட்டர சாியும், அதற்கு சார்ஜ் செய்ய USB Type-C போர்ட் இருக்கும்.

ரியல்மி 10 Pro+ ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் மூன்று வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 8GB ரேம் + 128GB மெமரி கொண்ட ஸ்மார்ட்போனின் விலை CNY 1,699 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 19,400) ஆகும். இதே போல் , 8GB + 256GB விலை CNY 1,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.22,90) மற்றும் 12GB + 256GB ஸ்மார்ட்போனின் விலை CNY 29,90 (இந்திய மதிப்பில் சுமார்ரூ 26,300 ஆகும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios