வீடு புகுந்து சுட்டுக்கொல்லப்பட்ட பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்! கனடா காலிஸ்தான் குழு பொறுப்பேற்பு!
துப்பாக்கிச் சூடு நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, கனடாவைச் சேர்ந்த காலிஸ்தானி பயங்கரவாதி அர்ஷ் டல்லா, பேஸ்புக் பதிவில் தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாகப் பதிவிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் உள்ள உள்ளூர் காங்கிரஸ் தலைவர் பல்ஜிந்தர் சிங் பல்லியை வீட்டிற்குள் பகுந்து சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திங்கள்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தில் கொன்றது யார் என்று தெரியாத நிலையில், போலீஸார் வெளியிடாத நிலையில், இந்தச் கொலையின் பின்னணியில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல்ஜிந்தர் சிங் பல்லி (45) மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பின்பு அவசரமாகத் தப்பிச் சென்றது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. பல்லியின் சொந்த ஊரான டல்லாவில் இந்த துணிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, கனடாவைச் சேர்ந்த காலிஸ்தானி பயங்கரவாதி அர்ஷ் டல்லா, பேஸ்புக் பதிவில் தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாகப் பதிவிட்டுள்ளார்.
மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட போதிலும், பல்லி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவல்துறை கண்காணிப்பாளர் இளஞ்செழியன் மற்ற அதிகாரிகளுடன் உடனடியாக சம்பவ இடத்தை பார்வையிட்டார். இந்தக் கொலை குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
மோகா மாவட்டத்தில் உள்ள அஜித்வால் தொகுதியின் கட்சியின் தலைவராக பல்லி பதவி வகித்தார். மூத்த காங்கிரஸ் தலைவர் பர்தாப் சிங் பாஜ்வா மற்றும் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அம்ரீந்தர் சிங் ராஜா வார்ரிங் ஆகியோர் இந்த கொடூரமான செயலைக் கண்டித்துள்ளனர்.
“ஒரு வேதனையான சம்பவத்தில், மோகா மாவட்டத்தின் அஜித்வால் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் பல்ஜிந்தர் சிங் பாலி (45) இன்று அவரது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். என் இதயம் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துடன் இருக்கிறது” என்று பர்தாப் சிங் பாஜ்வா ட்விட்டரில் கூறியிருக்கிறார்.
"பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்ததில் இருந்து, சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. மாநிலத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததற்கு, உள்துறை அமைச்சராக இருக்கும் முதல்வர் பகவந்த் மான் தான் நேரடிப் பொறுப்பு. ஆம் ஆத்மி அரசு நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இல்லையெனில், பஞ்சாப் காங்கிரஸ் போராட்டத்தில் இறங்கும்” என்றும் பாஜ்வா கூறியுள்ளார்.
அரசியல் சாசனப் புத்தகத்துடன் புதிய நாடாளுமன்றத்தில் அடி எடுத்து வைக்கும் பிரதமர் மோடி