நிலவை நெருங்கிய ஒடிசியஸ்! முதல் முறை நிலவில் தரையிறங்க இருக்கும் தனியார் விண்கலம்!
ஒடிசியஸ் லேண்டரின் தரையிறக்கம் வெற்றியடைந்தால், 1972இல் நாசாவின் நிலவை எட்டிய அப்போலோ 17க்குப் பிறகு, நிலவின் மேற்பரப்பில் தரையிங்கிய முதல் அமெரிக்க விண்கலம் என்ற சாதனையை IM-1 பெறும்.
அமெரிக்காவின் ஹூஸ்டனைச் சேர்ந்த இன்டியூடிவ் மிஷின்ஸ் (Intuitive Machines) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட IM-1 விண்கலத்தின் ஒடிஸியஸ் லேண்டர் நிலவின் புதன்கிழமை நிலவின் சுற்றுப்பாதையை அடைந்துள்ளது. இதன் மூலம் நிலவின் சுற்றுப்பாதையை அடைந்த முதல் தனியார் நிறுவனம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.
விரைவில் ஒடிஸியஸ் நிலவின் மேற்பரப்பை எட்டும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்க தனியார் விண்கலம் ஒன்று நிலவில் தரையிறங்கும் திட்டத்துடன் நிலவை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தகது.
ஆறு கால்கள் கொண்ட ஒடிஸியஸ் லேண்டர் நோவா-சி வகையைச் சேர்ந்தது. நிலவின் மேற்பரப்பில் இருந்து 57 மைல் (92 கிமீ) தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் நுழைந்திருக்கிறது என இன்டியூடிவ் மிஷின்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
HSRP நம்பர் பிளேட் கட்டாயம்! உடனே வாங்கிருங்க... மீறினால் அபராதம் ரொம்ப அதிகம்!
எல்லாம் திட்டமிட்டபடி நடக்கும் என்றால், விண்கலம் அடுத்த 24 மணிநேரத்தில் அதன் சுற்றுப்பாதையை படிப்படியாகக் குறைத்து, மாலை 5:49 மணிக்கு நிலவின் தென் துருவத்திற்கு அருகிலுள்ள மலாபெர்ட் ஏ பள்ளத்தாக்கில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 15ஆம் தேதி, ஒடிஸியஸ் லேண்டர் புளோரிடாவின் கேப் கனாவரலில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
ஒடிசியஸ் லேண்டரின் தரையிறக்கம் வெற்றியடைந்தால், 1972இல் நாசாவின் நிலவை எட்டிய அப்போலோ 17க்குப் பிறகு, நிலவின் மேற்பரப்பில் தரையிங்கிய முதல் அமெரிக்க விண்கலம் என்ற சாதனையை IM-1 பெறும்.
நிலவில் மென்மையான தரையிறக்கத்தை நிறைவேற்றிய முதல் வணிக ரீதியான விண்கலம் என்ற பெருமையையும் அடையும். நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் நிலவை அடைந்த முதல் விண்வெளிப் பயணமாகவும் இருக்கும்.
மற்றொரு நிறுவனமான ஆஸ்ட்ரோபோடிக் டெக்னாலஜியின் நிலவு லேண்டர், ஜனவரி 8ஆம் தேதி நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே உந்துவிசை கலனில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணமாக தோல்வி அடைந்தது.
இன்றுவரை, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய ஐந்து நாடுகளின் விண்கலங்கள் நிலவில் வெற்றிகரமாக மென்மையான தரையிறக்கத்தை நிறைவேற்றியுள்ளன.
5 நிமிடத்துக்கு ஒரு கார் விற்பனை! தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா சேல்ஸ் புதிய சாதனை!