விரைவில் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யும் போக்கோ... வெளியீடு எப்போ தெரியுமா?
போக்கோ நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஐவரி, பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
போக்கோ நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலின் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி போக்கோ வாட்ச் மாடல் ஏப்ரல் 26 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. போக்கோ வாட்ச் அறிமுக நிகழ்வு இந்திய நேரப்படி இறவு 9.30 மணிக்கு துவங்க இருக்கிறது.
சமீபத்தில் தான் போக்கோ நிறுவனம் புதிதாக ஸ்மார்ட்வாட்ச் உருவாக்கி வருவதாக தகவல் வெளியானது. மேலும் இதன் டிசைன், அம்சங்கள் பற்றிய தகவல்களும் இணையத்தில் வெளியாகின. இத்துடன் புதிய போக்கோ வாட்ச் ரெண்டர்களும் வெளியாகின. அதன் படி போக்கோ நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஐவரி, பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கும் என கூறப்பட்டது.
போக்கோ வாட்ச் அம்சங்கள்:
புதிய போக்கோ வாட்ச் மாடல் சதுரங்க வடிவம் கொண்ட பாடி, இதன் வலது புறம் நேவிகேஷன் பட்டன் காணப்படுகிறது. இந்த வாட்ச் மாடலில் 1.6 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 360x320 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டு வரும் மற்ற ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை போன்றே போக்கோ வாட்ச் மாடலிலும் ஆப்டிக்கல் ஹார்ட் ரேட் சென்சார், SpO2 டிராக்கல் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
போக்கோ வாட்ச் மாடலில் 225mAh பேட்டரி வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் 5ATM தர வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் வசதி கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. புது போக்கோ வாட்ச் தவிர ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலையும் போக்கோ நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
போக்கோ பட்ஸ்:
எனினும், இம்முறை போக்கோ வாட்ச் பற்றி மட்டுமே அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம் செய்வது பற்றி போக்கோ சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. முன்னதாக வெளியான தகவல்களின் படி போக்கோ பட்ஸ் மாடல் ரெட் நிற சார்ஜிங் கேஸ் மற்றும் இது யு.எஸ்.பி. டைப் சி போர்ட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
புகிய போக்கோ பட்ஸ் மாடல் தோற்றத்தில் ரெட்மி ஏர்டாட்ஸ் 3 ப்ரோ போன்றே காட்சியளிக்கிறது. இந்த இயர்பட்ஸ் IPX4 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.