Poco M4 Pro price : அசத்தல் விலையில் இன்று விற்பனைக்கு வரும் புது போக்கோ ஸ்மார்ட்போன்
Poco M4 Pro price : போக்கோ நிறுவனத்தின் புதிய போக்கோ M4 ப்ரோ ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று துவங்குகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
போக்கோ M4 ப்ரோ இந்திய விற்பனை இன்று துவங்குகிறது. இந்தியாவில் பிப்ரவரி 28 ஆம் தேதி அறிமுகமான போக்கோ M4 ப்ரோ அந்நிறுவனத்தின் புதிய 4ஜி ஸ்மார்ட்போன் ஆகும். புதிய போக்கோ M4 ப்ரோ மாடலில் 6.43 இன்ச் FHD+AMOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், 16MP செல்ஃபி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி96 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் ஸ்மார்ட்போனை அதிக சூடாகாமல் பார்த்துக் கொள்ள லிக்விட் கூலிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் அதிகபட்சமாக 8GB ரேம், 256GB இண்டர்னல் மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
போக்கோ M4 ப்ரோ போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த MIUI13 ஓ.எஸ்., பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது. இத்துடன் 5000mAh பேட்டரி, 33 வாட் ப்ரோ டூயல் ஸ்ப்லிட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்ய ஒரு மணி நேரம் மட்டுமே ஆகும் என போக்கோ தெரிவித்து உள்ளது.
விலை மற்றும் சலுகை விவரங்கள்
போக்கோ M4 ப்ரோ ஸ்மார்ட்போனின் 6GB ரேம், 64GB மாடல் விலை ரூ. 14,999 என்றும், 6GB ரேம், 128GB ரேம் மாடல் விலை ரூ. 16,499 என்றும் 8GB ரேம், 256GB மெமரி மாடல் விலை ரூ. 17,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கூல் புளூ, போக்கோ எல்லோ மற்றும் பவர் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் இன்று மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது.
புதிய போக்கோ M4 ப்ரோ ஸ்மார்ட்போனினை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ப்ளிப்கார்ட் சார்பில் கானா பிளஸ் சேவையை ஆறு மாதங்களுக்கு இலவசமாக பயன்படுத்த முடியும். இத்துடன் கேலக்ஸி பிக்சல் பட்ஸ் ஏ சீரிஸ் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ் மாடலை ரூ. 6,999 எனும் சிறப்பு விலையில் வாங்கிட முடியும். ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த இயர்பட்ஸ் வாங்க ரூ. 7,649 என பட்டியலிடப்பட்டு உள்ளது.
போக்கோ M4 ப்ரோ அம்சங்கள்:
- 6.43 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
- ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி96 பிராசஸர்
- மாலி-G57 MC2 GPU
- 6GB LPDDR4X ரேம், 64GB / 128GB UFS 2.2 மெமரி
- 8GB LPDDR4X ரேம், 128GB UFS 2.2 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 13
- டூயல் சிம் ஸ்லாட்
- 64MP பிரைமரி கேமரா, f/1.8
- 8MP 118° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா
- 2MP மேக்ரோ கேமரா, f/2.4
- 16MP செல்ஃபி கேமரா, f/2.4
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP53)
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்