Asianet News TamilAsianet News Tamil

Poco M4 Pro 5G : ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் 5ஜி ஸ்மார்ட்போன் - மாஸ் காட்டிய போக்கோ

போக்கோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் M4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

POCO M4 Pro 5G with Dimensity 810, 50MP camera, 5000mAh battery launched in India
Author
Tamil Nadu, First Published Feb 15, 2022, 2:54 PM IST

போக்கோ நிறுவனத்தின் புதிய M4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதே ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் இந்திய வெர்ஷன் அம்சங்கள் ரெட்மி நோட் 11T 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. 

அதன்படி போக்கோ M4 ப்ரோ 5ஜி மாடலில் 6.6 இன்ச் FHD+ 50Hz, 60Hz மற்றும் 90Hz என டைனமிக் ஸ்விட்ச் ரிப்ரெஷ் ரேட், 16Mஜ செல்ஃபி கேமரா, மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர், 13 5ஜி பேண்ட்களை சப்போர்ட் செய்யும் வசதி, அதிகபட்சம் 6GB ரேம்  வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

POCO M4 Pro 5G with Dimensity 810, 50MP camera, 5000mAh battery launched in India

போக்கோ M4 ப்ரோ 5ஜி அம்சங்கள்

- 6.6 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன்
- டைனமிக் ஸ்விட்ச் ரிப்ரெஷ் ரேட்
- ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 810 6nm பிராசஸர்
- மாலி-G57 MC2 GPU
- 4GB LPDDR4X ரேம், 64GB (UFS 2.2) மெமரி
- 6GB / 8GB LPDDR4X ரேம், 128GB (UFS 2.2) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12.5
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 50MP பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ்
- 8MP அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 16MP செல்ஃபி கேமரா, f/2.45
- பக்கவாட்டில் கைரேகை சென்சார், IR சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், எப்.எம். ரேடியோ
- டஸ்ட் மற்றும் வாட்ட்ர் ரெசிஸ்டண்ட் (IP53)
- 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

POCO M4 Pro 5G with Dimensity 810, 50MP camera, 5000mAh battery launched in India

போக்கோ M4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் பவர் பிளாக், கூல் புளூ மற்றும் போக்கோ எல்லோ என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4GB + 64GB மாடல் விலை ரூ. 14,999, 6GB + 128GB மாடல் விலை ரூ. 16,999, 8GB + 128GB மாடல் விலை ரூ. 18,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் பிப்ரவரி 22 ஆம் தேதி துவங்குகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios