இவ்வளவு கம்மி விலையா? விரைவில் இந்தியா வரும் போக்கோ 5ஜி போன்...!
இந்த ஸ்மார்ட்போன் மாடல் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், இதன் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
போக்கோ நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் மாடலாக F4 5ஜி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தை மட்டும் இன்றி சர்வதேச சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய போக்கோ F4 5ஜி ஸ்மார்ட்போனிற்கான வெளியீட்டு தேதி பற்றி போக்கோ தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இதன் வெளியீடு இந்த மாத இறுதியில் நடைபெறும் என கூறப்படுகிறது.
புதிய போக்கோ F4 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிபிசெட் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இது மிகவும் ஆப்டிமைஸ் செய்யப்பட்ட ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் சிப்செட் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் மாடல் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், இதன் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
விலை விவரங்கள்:
அதன் படி போக்கோ F4 ஸ்மார்ட்போன் 12GB LPDDR5 ரேம், 256GB UFS3.1 மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படலாம். இந்த பிரிவில் கிடைக்கும் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் அதிவேக ஸ்மார்ட்போன் மாடலாக போக்கோ F4 5ஜி இருக்கும் என தெரிகிறது. சர்வசேச சந்தையில் போக்கோ F4 மாடலின் விலை விவரங்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி போக்கோ F4 சர்வதேச சந்தையில் ஒற்றை வேரியண்டில் கிடைக்கும் என்றும் இதன் விலை 459 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 35 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். இந்திய சந்தையில் புதிய போக்கோ F4 5ஜி மாடலின் விலை வங்கி சலுகைகளை சேர்த்து ரூ. 26 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில், குறைந்த விலையில் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போனாக இது இருக்கும்.
போக்கோ F4 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
- 6.67 இன்ச் FHD+ AMOLED 120Hz டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர்
- 6GB ரேம்
- 128GB மெமரி
- 64MP பிரைமரி கேமரா
- 8MP அல்ட்ரா வைடு கேமரா
- 2MP டெப்த் அல்லது மோனோ கேமரா
- 20MP செல்பி கேமரா
-4520mAh பேட்டரி
- 67 வாட் சார்ஜிங்
- ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI13
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ
-5ஜி, 4ஜி, வைபை 6, ப்ளூடூத் 5.1