Asianet News TamilAsianet News Tamil

ஸ்மார்ட்போன் விலை குறைய அதிக வாய்ப்பு ..!! இந்தியாவிலேயே உற்பத்தி தொடங்க திட்டம் ...!!!

planned to-start-smart-phone-production-in-india
Author
First Published Dec 30, 2016, 1:47 PM IST


ஸ்மார்ட்போன் விலை குறைய அதிக வாய்ப்பு ..!! இந்தியாவிலேயே உற்பத்தி தொடங்க திட்டம் ...!!!

இந்தியாவில்,  அதிகளவில் ஸ்மார்ட் போன்  விற்பனையாகிறது. இந்திய மக்கள் பொதுவாகவே , புது புது ஸ்மார்ட்  போன்களின்  வரவேற்புக்காக  முன்பதிவிட்டு  காத்திருப்பவர்கள்.சொல்லப்போனால்,  இன்டர்நெட்  பயன்பாடும்  இந்தியாவில்  தான்  அதிகம் பயன்படுத்தபடுகிறது.இதற்கெல்லாம்  ஏற்ற  மொபைல் என்றால்  அது  ஸ்மார்ட்  போனஸ் தான்  என்பதில் எந்த மாற்றமும்  கிடையாது.

இந்நிலையில், நாம்  விருப்பட்டு  வாங்கும்  அதிக  ஸ்மார்ட்  பொன்ஸ்கள்  வெளிநாடுகளிலிருந்து தான்  இறக்குமதி  செய்யப்பட்டு  வருகிறது.அதனால் விலையும் அதிகமாக  உள்ளது.

இந்நிலையில்  தற்போது,  பிரபல   ஸ்மார்ட்  போன் தாரிப்பு  நிறுவனமான  ஆப்பிள்  நிறுவனம்,  தங்கள்  தயாரிப்பை ன் இந்தியாவில்  மேற்கொள்ள   விருப்பம் தெரிவித்து, இது குறித்த  பேச்சு வார்த்தை  மத்திய  அரசுடன்  நடைபெற்று,தற்போது  கர்நாடக  மாநிலம்  பீன்யா மற்றும்  பெங்களூர்  போன்ற இடங்களில்  , ஐ போன்  உற்பத்தி  தொடங்க  உள்ளதாக  செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும்,  இந்திய அரசும்,  சீன  தயாரிப்பு ஸ்மார்ட் போன்களின்  உற்பத்தியை  இந்தியாவில்  மேற்கொள்ள  ஆர்வம்  காட்டுகிறது.

 குறிப்பு :உற்பத்தியில்  மிகவும்  பிரசித்தி  பெற்ற  நிறுவனமான பாக்ஸ்கான்  நிறுவனம் ,  ஆப்பிள் ,  OnePlus and Xiaomi உள்ளிட்ட  நிறுவனத்துடன் இணைந்து, ஸ்மார்ட்  போன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது  என்பது  குறிப்பிடத்தக்கது.

அறிவித்தபடி, இந்தியாவிலேயே  ஸ்மார்ட்  போன்  உற்பத்தி தொடங்கினால், வரும்  ஆண்டுகளில்  மிக குறைந்த  விலையில்  ஸ்மார்ட் போன்  கிடைக்கும் என்பது குறிபிடத்தக்கது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios