அடேங்கப்பா… கேமராவில் ஐபோன் 14 ப்ரோவை மிஞ்சிய Pixel 6A.. விலையும் இப்போது ஆஃபரில் ரூ.29,999

சில பிரபலமான ஃபிளாக்ஷிப் போன்களுடன் ஒப்பிடும்போது, சிறந்த கேமரா செயல்திறனைன பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன் கொண்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. தற்போது புத்தாண்டை முன்னிட்டு பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனின் விலை குறைந்துள்ளது.

Pixel 6a beats iPhone 14 Pro and Galaxy S22 Ultra in blind camera tests, check price offer here

Marques Brownlee என்ற டெக் யூடியூபருக்கு சுமார் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும்,  இந்த யூடியூபர் பல பிரபலமான ஃபோன்களின் கேமரா செயல்திறனை ஒப்பிட்டுப் பார்த்து, சிறந்ததாகத் தோன்றும் ஒன்றிற்கு வாக்களிக்குமாறு பயனர்களிடம் கேட்கிறார். அந்த வகையில், இவர் இந்த 2022 ஆண்டுக்காக நடத்திய பிரீமியம் ஸ்மார்டபோன்களுக்கான கேமரா ஒப்பீடு சோதனையும் நடத்தினார். 

இந்த சோதனையில் பின்வரும் ஃபோன்கள் சோதிக்கப்பட்டன: Huawei Mate 50 Pro, iPhone 14 Pro, Moto Edge 30 Ultra, Nothing Phone (1), OnePlus 10 Pro, Oppo Find X5 Pro, Google Pixel 6a, Realme 10 Pro+, Asus ROG. ஃபோன் 6, Apple iPhone SE, Google Pixel 7 Pro, Samsung Galaxy S22 Ultra, Sony Xperia 1 IV, Xiaomi 12s Ultra, Asus Zenfone 9 மற்றும் Vivo X80 Pro+.

இவற்றில் Pixel 6a ஸ்மார்ட்போனானது iPhone 14 Pro மற்றும் Samsung Galaxy S22 Ultra போன்ற விலையுயர்ந்த போன்களை முறியடித்துள்ளது. பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஏனெனில் ஆப்பிள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் இருக்கும் போது, அதற்கு இணையாக வேறு ஸ்மார்ட்போன்கள் இருக்க முடியாது என்றே பலரும் நினைத்திருந்தனர். 

ஸ்மார்ட்போன் பேட்டரிகளை இனி ஈஸியாக மாற்றிக்கொள்ளலாம்! வருகிறது புதிய விதிமுறை?

ஆனால்,  ஃபிளாக்ஷிப்களை விட மிட்-ரேஞ்ச் பிரீமியம் ஃபோன் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியது. குறிப்பாக வண்ண தரப்படுத்தல், வெளிப்பாடு, காண்ட்ரஸ்ட், படத்தின் துல்லியம் என அனைத்திலும் பிக்சல் ஸ்மார்ட்போன் அபரிமிதமாக செயல்பட்டது. இந்த பிளைண்ட் கேமரா சோதனையில் பிக்சல் 6a ஆனது 2022 ஆம் ஆண்டிற்கான "ஒட்டுமொத்தமாக சிறந்தது" என்ற பெயரை பெற்றது. மேலும், பிக்சல் 7 ப்ரோ "சிறந்த போர்ட்ரெய்ட்" கேமரா போன் என்றபேட்ஜையும் பெற்றது. 

"குறைந்த ஒளியில் சிறப்பாக படம்பிடித்தல்" என்ற பிரிவிலும் Pixel-A சீரிஸ் ஸ்மார்ட்போன் இரண்டாவது இடத்தை பெற்றது. சுவாரஸ்யமாக, கூகுளின் Pixel 7 சீரிஸ் கூட சில கேமரா தன்மையில், குறைந்த விலையுள்ள Pixel 6a ஐ விட சிறப்பாக செயல்பட முடியவில்லை. "ஒட்டுமொத்தத்தில் சிறந்த ஸ்மார்ட்போன்" என்ற பெயரை பெற்ற இரண்டாவது இடத்தில் கூகுள் 7 ப்ரோ உள்ளது. Samsung Galaxy S22 Ultra ஐந்தாவது இடத்தைப் பெற்றது. 

பிக்சல் 6a இந்த ஆண்டு ரூ.43,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது, தற்போது இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.29,999க்கு வாங்கலாம். சிறந்த கேமரா ஃபோனைப் பெற விரும்புவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios