Oppo Reno 8T இன்று முதல் விற்பனை! ஆஃபர் விலை விவரங்கள் இதோ!!

Oppo நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்த மிட்-ரேஞ்ச் விலை ஸ்மார்ட்போனான Oppo Reno 8T இன்று விற்பனை செய்யப்படுகிறது. இதன் அசல் விலை, ஆஃபர்கள், சிறப்பம்சங்கள் குறித்த முழுமையான விவரங்களை இங்குக் காணலாம்.

Oppos new launch latest smartphone Oppo Reno 8T set to go on its first sale today

ஒப்போ நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒப்போ ரெனோ 8T ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது ஒப்போவின் இந்தாண்டுக்கான முதல் ஸ்மார்ட்போன் என்பதால், ரெனோ ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. 30 ஆயிரம் ரூபாய்க்கு பிரீமியம் தரத்திலான அம்சங்கள் இதில் உள்ளன. இந்த ஒப்போ ரெனோ 8T ஸ்மார்ட்போன் இன்று பிப்.10 முதல் விற்பனைக்கு வருகிறது.

மேலும், ஒப்போவின் இந்த புதிய ஸ்மார்ட்போனுக்கு சில வங்கி சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கோடக் வங்கி, HDFC, யெஸ் வங்கி மற்றும் SBI கார்டு வைத்திருப்பவராக இருந்தால், 10 சதவிகிதம் தள்ளுபடி பெறலாம். அதே போல், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் ஸ்டோர்களில் இருந்து ஸ்மார்ட்போன் வாங்கினால், எக்ஸ்சேஞ்ச் சலுகையாக ரூ.3000 பெறலாம். 

வெளியில் மொபைல் கடைகளில் இருந்து ஸ்மார்ட்போன் பெற்று, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ கார்டுகள், கோடக் மஹிந்திரா வங்கி, யெஸ் பேங்க், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், ஒன் கார்டு, ஏயூ வங்கி மூலம் 6 மாதங்கள் வரை 10 சதவீத கேஷ்பேக் மற்றும் நோ-காஸ்ட் இஎம்ஐ பெற முடியும். 

கூடுதலாக, Cashify மூலம் OPPO ஃபோன் வாங்குபவர்கள் ரூ.2000 எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் ரூ.1000 லாயல்டி போனஸையும் பெறலாம். இப்போது நீங்கள் Oppo ஃபோனுடன் இயர்பட்களை வாங்க விரும்பினால், அதையும் ஸ்மார்ட்போனுடன் சேர்த்து 500 ரூபாய் தள்ளுபடியில் பெறலாம். அதாவது, இயர்பட்களின் விலை ரூ. 2999, ஆனால் நீங்கள் அதை ஃபோனுடன் வாங்கினால், ரூ. 2500க்கு இயர்பட்ஸைப் பெறலாம். அதுமட்டுமின்றி, பஜாஜ் ஃபின்சர்வ், ஐசிஐசிஐ வங்கி, டிவிஎஸ் கிரெடிட், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் போன்ற முன்னணி ஃபைனானஸ் நிறுவன பிளான்களும் உள்ளன.

Oppo Reno 8T: சிறப்பம்சங்கள்:

OPPO Reno8 T 5G ஆனது OPPO Glow உடன் மைக்ரோ-வளைந்த வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இது ஒரு வசதியான, கையில் அடக்கமான அளவில் உள்ளது. சாதனம் 6.7 இன்ச் Dragontrail-Star2 AMOLED திரையுடன் வருகிறது. இதில் 120Hz ரெப்ரெஷ் ரேட், பஞ்ச்-ஹோல் FHD+ டிஸ்ப்ளே- 10-பிட் கலர் ஆகியவை உள்ளன.
Reno8 T 5Gயின் 108MP போர்ட்ரெய்ட் கேமரா, NonaPixel Plus பின்னிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது, இது 9 பிக்சல்களில் இருந்து தகவல்களை ஒருங்கிணைத்து ஒரு சூப்பர் பிக்சலையும், OPPOவின் AI போர்ட்ரெய்ட் சூப்பர் ரெசல்யூஷன் அல்காரிதம் அல்ட்ரா-தெளிவான, உயர்-தெளிவுத்திறன் படங்களை எடுக்கவும் பயன்படுத்துகிறது.

நம்ப முடியாத விலையில் விலையில் Moto E13 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

OPPO ஆனது அதன் ColorOS 13 இன் டைனமிக் கம்ப்யூட்டிங் எஞ்சின் மூலம் சாதனத்தின் செயல்திறனை மேலும் மேம்படுத்துகிறது, இது 18 செயலிகள் வரையில் தாராளமாக இயக்கத்தில் வைத்திருக்கும் திறன் கொண்டது ஆகும். வழக்கமான முறையில், ஸ்மார்ட்போனில் 4,800mAh பேட்டரி உள்ளது, இது OPPOவின் 67W SuperVOOCTM ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் மற்றும் அதன் தனியுரிம பேட்டரி ஹெல்த் எஞ்சின் மூலம் 45 நிமிடங்களுக்குள் 100% சார்ஜ் செய்கிறது .
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios