Oppo watch : அடேங்கப்பா 14 நாட்களுக்கு பேக்கப் கொடுக்குதா? அசத்தல் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

ஒப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் அதிகபட்சம் 14 நாட்களுக்கு தேவையான  பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

OPPO Watch Free with up to 14 days battery life launched in India

ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் ஒப்போ வாட்ச் ஃபிரீ மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. பட்ஜெட் பிரிவில் அறிமுகமாகி இருக்கும் புதிய ஒப்போ ஸ்மார்ட்வாட்ச்  1.64 இன்ச் 2.5D வளைந்த AMOLED ஸ்கிரீன், ப்ளூடூத் 5.0, 24 மணி நேர இதய துடிப்பு சென்சார், அட்வான்ஸ்டு ஸ்லீப் அம்சம், SpO2 மாணிட்டரிங், ஸ்லீப் மாணிட்டரிங் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. 

இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 14 நாட்களுக்கு தேவையான பேட்டரி பேக்கப் பெற முடியும். இத்துடன் இதில் வழங்கப்பட்டு இருக்கும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டு ஐந்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ஒரு நாளுக்கு தேவையான பேக்கப் பெற முடியும்.

OPPO Watch Free with up to 14 days battery life launched in India

 

ஒப்போ வாட்ச் ஃப்ரீ அம்சங்கள் 

- 1.75 இன்ச் 280x456 பிக்சல் 2.5D வளைந்த AMOLED ஸ்கிரீன்
- 6-ஆக்சிஸ் மோஷன் சென்சார், ஆப்டிக்கல் இதய துடிப்பு சென்சார்
- ஆம்பியண்ட் லைட் சென்சார்
- 100+ அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்
- ப்ளூடூத் 5.0
- வாட்டர் ரெசிஸ்டண்ட் (5ATM)
- 230mAh பேட்டரி

இந்தியாவில் புதிய ஒப்போ வாட்ச் ஃபிரீ மாடலின் விலை ரூ. 5999 ஆகும். இதன் விற்பனை விரைவில் துவங்க இருக்கிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios