ஒப்போ நிறுவனம் இந்தியாவில் தனது ரெனோ 7 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களின் முன்பதிவை துவங்கி இருக்கிறது.  

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் தனது ரெனோ 7 5ஜி ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ஒப்போ இந்தியா வலைதளங்களில் நடைபெறுகிறது. ஒப்போ ரெனோ 7 5ஜி ஸ்மார்ட்போன் ரெனோ 7 ப்ரோ 5ஜி மாடலுடன் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த மாடலில் 6.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர், 8GB ரேம், 256GB மெமரி, 64MP பிரைமரி கேமரா, 8MP அலல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 

இந்திய சந்தையில் ஒப்போ ரெனோ 7 5ஜி மாடல் விலை ரூ. 28,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்பதிவு துவங்கி உள்ள நிலையில் விற்பனை பிப்ரவரி 17 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்டார்லைட் பிளாக் மற்றும் ஸ்டார்டிரையல்ஸ் புளூ நிறங்களில் கிடைக்கிறது.

ஒப்போ மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் ஒப்போ என்கோ M32 இயர்போன் ரூ. 1399 எனும் சிறப்பு விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் உண்மை விலை ரூ. 1799 ஆகும். இத்துடன் ரெனோ 7 5ஜி மாடலுக்கு ப்ளிப்கார்ட் தளத்தில் வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் ரூ. 3 ஆயிரம் எக்சேன்ஜ் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

ஒப்போ ரெனோ 7 5ஜி அம்சங்கள்

- 6.4 இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
- மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர்
- 8GB ரேம், 256GB மெமரி
- 64MP பிரைமரி கேமரா
- 8MP அல்ட்ரா வைடு கேமரா
- 2MP மேக்ரோ கேமரா
- 32MP செல்ஃபி கேமரா
- ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர் ஓ.எஸ். 12
- 4500mAh பேட்டரி
- 65 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்