ஒப்போ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெனோ 7 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய விற்பனை இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.

ஒப்போ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெனோ 7 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் பிப்ரவரி 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஸ்மார்ட்போனுடன் ஒப்போ ரெனோ 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலின் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற்று வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தற்போது ஒப்போ நிறுவனம் தனது ரெனோ 7 5ஜி ஸ்மார்ட்போனினை 8GB ரேம், 256GB மெமரி மாடல் எனும் ஒற்றை வேரியண்டில் தான் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்டேரி பிளாக் மற்றும் ஸ்டார்டிரையல்ஸ் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. 

இன்று நள்ளிரவு 12 மணிக்கு ப்ளிப்கார்ட் தளத்தில் ஒப்போ ரெனோ 7 5ஜி மாடலின் விற்பனை துவங்கியது. இந்த ஸ்மார்ட்போனிற்கு அசத்தலான தள்ளுபடி, சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ப்ளிப்கார்ட் மட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஒப்போ அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் நடைபெற்று வருகிறது. இந்த தளத்திலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ஆறு மாதங்களுக்கு வட்டிவில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. மேலும் ஒப்போ ரெனோ 7 5ஜி வாங்குவோருக்கு 30 வாட் பவர்பேங்க் ஒன்றும் இலவசமாக வழங்கப்படுகிறது. 

ஒப்போ ரெனோ 7 5ஜி அம்சங்கள்

- 6.4 இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
- மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர்
- 8GB ரேம், 256GB மெமரி
- 64MP பிரைமரி கேமரா
- 8MP அல்ட்ரா வைடு கேமரா
- 2MP மேக்ரோ கேமரா
- 32MP செல்ஃபி கேமரா
- ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர் ஓ.எஸ். 12
- 4500mAh பேட்டரி
- 65 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்