OPPO களமிறக்கும் அட்டகாசமான 5ஜி போன்கள்; பட்ஜெட் விலை; என்னென்ன சிறப்பம்சங்கள்?

ஓப்போநிறுவனம் ரெனோ 13 5G சீரிஸ் மாடல் போன்களை ஜனவரி 9 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இந்த போனில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பது குறித்து பார்ப்போம். 

Oppo Reno 13 5G Series will launch in India on january 9 ray

ஓப்போ ரெனோ 13 5G சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்

ஓப்போ நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரெனோ 13 5G சீரிஸ் ஸ்மார்ட்போன்களை ஜனவரி 9 ஆம் தேதி மாலை 5:00 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த சீரிஸில் ஓப்போ ரெனோ 13 5G மற்றும் ஓப்போ ரெனோ 13 ப்ரோ 5G ஆகியவை அடங்கும். இந்த போன்கள் இரண்டும் சில சர்வதேச நாடுகளில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்தியாவில் இன்னும் சில நாட்களில் அறிமுகமாகிறது. 

ஃபிளிப்கார்ட் மற்றும் ஓப்போ இந்தியாவின் ஆன்லைன் உள்பட முக்கிய தளங்கள் ஓப்போ சீரிஸ் அறிமுக தொடக்க நிகழ்வை இணையத்தில் ஒளிபரப்பு செய்ய உள்ளன. ரெனோ 13 5G சீரிஸ் 2024 நவம்பரில் சீனாவில் அறிமுகமான நிலையில், இதன் இந்திய மாடல்களில் பல மேம்பாடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஓப்போ ரெனோ 13 சீரிஸ் ஐவரி ஒயிட் மற்றும் லுமினஸ் ப்ளூ என வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கும். 

கேமரா என்ன? 

அதே வேளையில் ஓப்போ ரெனோ 13 ப்ரோ மிஸ்ட் லாவெண்டர் மற்றும் கிராஃபைட் கிரே வண்ணங்களில் கிடைக்கும்.ஓப்போ ரெனோ 13 5G 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி அல்லது 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓப்போ ரெனோ 13 ப்ரோ 5க் மாடல் 256ஜிபி மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் உடன் கூடுதலாக 12ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 8350 SoC சிப்செட் உள்ளதால் போனை இயக்குவதற்கு எளிதாக இருக்கும். ஓப்போவின் சிக்னல்பூஸ்ட் X1 சிப்கள் மேம்படுத்தப்பட்ட செயல்திறனுக்காகப் பயன்படுத்தப்படும். இந்த போன்களின் கேமராவைப் பொறுத்தவரை, ஓப்போ ரெனோ 13 ப்ரோ 5G 3.5x ஆப்டிகல் மற்றும் 120x டிஜிட்டல் ஜூம் வரை கொண்ட 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது.

நீரில் இருந்து தாக்குபிடிக்கும் திறன் 

AI-ஆதரவு பட அம்சங்கள் இரண்டு போன்களிலும் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தாலும், அடிப்படை ரெனோ 13 5G மிகவும் வழக்கமான கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன்களின் பேட்டரி அதிகம் உழைக்கும் தன்மையுடன் உள்ளன. அதாவது ரெனோ 13 5ஜி பாஸ்ட் சார்ஜிங் திறன்களுடன் 5,600mAh பேட்டரியைக் கொண்டிருக்கலாம். 

அதே நேரத்தில் ரெனோ 13 ப்ரோ 5G 80W சூப்பர்VOOC கேபிள் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,800mAh பேட்டரியைக் கொண்டிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன்கள் நீரில் தாக்குப்பிடிக்கும் தன்மை மற்றும் தூசியில் இருந்து பாதுகாக்கும் IP68 மற்றும் Iப்69 சான்றிதழ் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைவரும் வாங்கும் வகையில் பட்ஜெட் விலையில் இந்த போன் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios