OPPO K14 5G ஸ்மார்ட்போன், போன் ஸ்லோ ஆகும் பிரச்சினைக்கு தீர்வாக, 60 மாத ஃப்ளூயன்சி பாதுகாப்புடன் வருகிறது. இதில் 7000mAh பெரிய பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், மற்றும் மிலிட்டரி தரச் சான்றிதழுடன் கூடிய உறுதியான வடிவமைப்பு உள்ளது.

நம்ம நாள்ல பாதி நேரம் நம்ம கையில இருக்கிறது ஸ்மார்ட்போன்தான். பேமெண்ட்ஸ், மேப்ஸ், கால்ஸ், மெசேஜ், கேமிங்னு எல்லாத்துக்கும் போனைத்தான் நம்பியிருக்கோம். இந்த நேரத்துல போன் ஸ்லோ ஆனா, ஹேங் ஆனா, இல்ல பேட்டரி டக்குனு தீர்ந்துட்டா நம்ம வேலையே நின்னுடும். பல போன்கள் வாங்குன புதுசுல நல்லா வேலை செய்யும். ஆனா, சில மாசத்துல ஆப்ஸ் அதிகமாக அதிகமாக, டேட்டா அதிகமாக அதிகமாக, போனோட வேகம் குறைஞ்சிடும். இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வாதான் ஓப்போ கே14 5ஜி (OPPO K14 5G) போனை வடிவமைச்சிருக்காங்க.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தினசரி பயன்பாட்டில் சூப்பர் ஸ்மூத் அனுபவம்

போன் ஸ்மூத்தா வேலை செஞ்சா நாம அதைக் கவனிக்க மாட்டோம். ஆனா, கொஞ்சம் லேக் ஆனா உடனே தெரிஞ்சிடும். OPPO K14 5G ஸ்மார்ட்போன்ல 60 மாத ஃப்ளூயன்சி பாதுகாப்பு (60-month fluency protection) இருக்கு. அதாவது, அஞ்சு வருஷம் வரைக்கும் போன் ஸ்மூத்தா வேலை செய்யும்னு சொல்றாங்க. இதுல MediaTek Dimensity 6300 பிராசஸர் இருக்கு. அதோட ColorOS 15 Trinity Engine, Dual Engine Optimization போன்ற தொழில்நுட்பங்கள், ஆப்ஸ் திரும்பத் திரும்ப ரீலோட் ஆகுறத தடுக்குது. 

இதனால மல்டிடாஸ்கிங் ரொம்ப ஈஸியா இருக்கும். கேமிங் அப்போ லேக் ஆகுறதும் குறையும். இந்த போன்ல கூடுதலாக 16GB வரை RAM-ஐ விரிவாக்கம் செஞ்சுக்கலாம். 3900mm² சூப்பர்கூல் வேப்பர் சேம்பர் இருப்பதால், அதிக நேரம் பயன்படுத்தினாலும் போன் சூடாகாமல் பார்த்துக்கொள்ளும்.

பெரிய பேட்டரி – நாள் முழுக்க டென்ஷன் இல்லை

நிறைய பேருக்கு பேட்டரிதான் பெரிய தலைவலி. ஆனா இந்த போன்ல அந்த கவலை இல்லை. 7000mAh பேட்டரி கொடுத்திருக்காங்க. இந்த பட்ஜெட்ல இது ரொம்பவே அதிகம். ஒரு நாள் முழுக்க கால்ஸ், வீடியோஸ், சோஷியல் மீடியானு முழுசா பயன்படுத்தினாலும் சார்ஜ் நிக்கும். இதுல 45W SUPERVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருக்கு. இதனால ரொம்ப குறைஞ்ச நேரத்துல போனை சார்ஜ் பண்ணிடலாம். முக்கியமா, இந்த பேட்டரி நீண்ட காலத்துக்கு நல்லா உழைக்கும். 

ஒண்ணு, ரெண்டு வருஷம் கழிச்சும் பேட்டரி திறன் குறையாது. தினசரி பயன்பாட்டுக்கு ஏத்த மாதிரி உறுதியான டிசைன்ல இந்த போன் வருது. தண்ணி, தூசியில இருந்து பாதுகாக்க IP66, IP68, IP69 ரேட்டிங்ஸ் இருக்கு. MIL-STD-810H மிலிட்டரி தரச் சான்றிதழும் வாங்கியிருக்கு. அதாவது, மழையில நனைஞ்சாலும், லேசா கீழ விழுந்தாலும் ஒண்ணும் ஆகாது. இதுல 6.75 இன்ச் டிஸ்ப்ளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1125 nits பிரைட்னஸ் இருக்கு. இதனால வெயில்லகூட ஸ்கிரீன் தெளிவா தெரியும். ஸ்பிளாஷ் டச், க்ளோவ் டச் போன்ற அம்சங்களும் இதுல இருக்கு.

வேகம் மட்டுமல்ல, நிலைத்தன்மையும் முக்கியம்

இந்த போனோட ஸ்பெஷாலிட்டி வெறும் வேகம் மட்டும் இல்லை, நிலைத்தன்மைதான். அதிக நேரம் கேம் விளையாடினாலும், ஒரே நேரத்துல பல ஆப்ஸ் பயன்படுத்தினாலும், போனோட வேகம் குறையாது. கூலிங் சிஸ்டம் போன் சூடாகாம பார்த்துக்கும்.

கேமரா எப்படி இருக்கு?

கேமராவைப் பொறுத்தவரை, இதுல 50MP AI கேமரா இருக்கு. இதனால சுலபமா நல்ல போட்டோஸ் எடுக்கலாம். தேவையில்லாத ஆப்ஜெக்ட்களை நீக்குறது, மங்கலான போட்டோவை சரிசெய்றது, குறைவான வெளிச்சத்துல போட்டோவை அழகாக்குறதுனு பல வேலைகளை இந்த AI கேமராவே பார்த்துக்கும். அதாவது, போட்டோ எடுத்த பிறகு எடிட்டிங் வேலை ரொம்ப கம்மியா இருக்கும்.

விற்பனைக்குப் பிறகான சேவையும் சூப்பர்

OPPO இந்த போனுக்கு நல்ல சர்வீஸ் சப்போர்ட்டும் கொடுக்குது. 30 நாள் ரீப்ளேஸ்மென்ட் ஆஃபர், OPPO Care சர்வீஸ் திட்டங்கள், இந்தியா முழுவதும் 580-க்கும் மேற்பட்ட சர்வீஸ் சென்டர்கள் இருக்கு.

விலை விவரங்கள்:

  • 6GB + 128GB வேரியண்ட் விலை ரூ. 19,999
  • 8GB + 256GB வேரியண்ட் விலை ரூ. 23,999

ஆஃபர்களைப் பொறுத்தவரை, HDFC, ICICI, SBI கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். 3 மாத வட்டியில்லா EMI ஆப்ஷனும் இருக்கு. இந்த போன் பிளிப்கார்ட் மற்றும் ஓப்போவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் விற்பனைக்குக் கிடைக்குது. ரூ. 25,000-க்குள்ள ஹேங் ஆகாத, அடிக்கடி சார்ஜ் போடத் தேவையில்லாத, உறுதியான ஒரு போன் வேணும்னு நினைக்கிறவங்களுக்கு OPPO K14 5G ஒரு நல்ல சாய்ஸ்.