இந்தியாவில் ஓப்போ Enco Buds 3 Pro+ TWS இயர்பட்ஸ் ரூ.2,099 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 12.4mm டைனமிக் டிரைவர் சிறந்த ஒலி அனுபவத்தை உறுதி செய்கிறது.
TWS earbuds segment-ல் போட்டி அதிகமாயிருந்தாலும், ஓப்போ கடந்த சில வருடங்களாக அதிக மதிப்புள்ள பணத்திற்கான இயர்பட்களை அறிமுகப்படுத்துகிறது. இப்போது அதே வரிசையில், இந்தியாவில் ஓப்போ Enco Buds 3 Pro+ வெளியிடப்பட்டுள்ளது. விலை குறைவு, ANC ஆதரவு, பெரிய பேட்டரி காப்பு இவை மூன்றும் சேர்ந்து நுழைவு மற்றும் இடைப்பட்ட பிரிவில்-ல் பெரிய போட்டியை உருவாக்குகிறது.
விலை எவ்வளவு?
இந்த earbuds-ஐ ஓப்போ இந்தியாவில் ரூ.2,099 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் launch offer-ஆக முதல் sale-ல் இது வெறும் ரூ.1,899 மட்டுமே. Midnight Black மற்றும் Sonic Blue என இரண்டு நிறங்களில் கிடைக்கும். ஓப்போ அதிகாரப்பூர்வ கடைகளில் மட்டுமல்ல, Flipkart, Amazon மற்றும் offline stores அனைத்திலும் கிடைக்கும் என்பதால் வாங்குவது மிகவும் எளிது.
ஓப்போ Enco Buds 3 Pro+
ஓப்போ Enco Buds 3 Pro+l 12.4mm dynamic driver உள்ளது. இதனால் ஹெவி பேஸ், தெளிவான குரல், சமநிலையான ட்ரெபிள் இசை போன்றவை கிடைக்கிறது. 112±3 dB உணர்திறன் மற்றும் 20Hz–20kHz அதிர்வெண் வரம்பு ஒலி வெளியீடு என்பதால் மிக நன்றாக இருக்கும். மைக் உணர்திறன் -38 dBV/Pa அழைப்புகள்-ல் குரல் தெளிவு மேலும் மேம்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் கிடைக்காத வசதி
ரூ.2,000 ரேஞ்சில் Active Noise Cancellation கிடைத்தால் அது பெரிய பிளஸ். Enco Buds 3 Pro+ upto 32dB ANC support செய்கிறது, அதனால் பஸ், மெட்ரோ, ஆபிஸ் போன்ற noisy இடத்திலும் இசை தெளிவாக கேட்கும். Transparency mode மூலம் வெளியிலுள்ள ஒலியையும் தேவையான நேரத்தில் கேட்கலாம் safe-க்கு மிகவும் பயனுள்ளது.
43 மணிநேர பேட்டரி பேக்கப்
ஒவ்வொரு earbud-லும் 58mAh பேட்டரி, கேஸ்-ல் 440mAh பேட்டரி உடன் வருகிறது. ANC இல் 28 மணி, ANC ஆஃப் நிலையில் முழு 43 மணி வரை கிடைக்கும். ஒவ்வொரு இயர்பட்-ம் 4.2 கிராம் மட்டுமே, கேஸ் 46.2 கிராம். காலை வேலை, உடற்பயிற்சி கூடம், அலுவலக பயணம் எந்த சூழலிலும் பயன்படுத்தலாம்.

