ஒன்பிளஸ், ரியல்மி, அசுஸ்... புது பிளாக்‌ஷிப் பிராசஸருக்கு வரிசை கட்டும் நிறுவனங்கள்...!

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. 

 

OnePlus Smartphone, Realme GT2 Master Explorer Edition, Asus ROG Phone 6 to Feature Snapdragon 8+ Gen 1 SoC

ஒன்பிளஸ், ரியல்மி மற்றும் அசுஸ் நிறுவனங்கள் தங்களின் புது ஸ்மார்ட்போன் மாடல்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிளாக்‌ஷிப் பிராசஸர் கொண்டிருக்கும் என அறிவித்து உள்ளன. குவால்காம் நிறுவனம் சமீபத்தில் தான் தனது புதிய பிளாக்‌ஷிப் பிராசஸர்- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸரை அறிமுகம் செய்து இருந்தது. 

இதை அடுத்து அசுஸ் நிறுவனம் தனது ரோக் போன் 6 கேமிங் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என தெரிவித்து இருக்கிறது. இதே போன்று ஒன்பிளஸ் நிறுவனமும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. 

ரியல்மி:

இரு நிறுவனங்கள் வரிசையில் ரியல்மி நிறுவனமும் தனது GT2 மாஸ்டர் எக்ஸ்ப்ளோரர் எடிஷன் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும் என அறிவித்து உள்ளது. இதே போன்று பல்வேறு இதர ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதாக அறிவித்து உள்ளன. 

எனினும், இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் நிறுவனங்கள் புதிய குவால்காம் ஃபிளாக்‌ஷிப் பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன்களை முதலில் வெளியிட இருப்பதாக அறிவித்து இருக்கின்றன. ஒன்பிளஸ் நிறுவனம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போனிற்கான டீசரை தனது அதிகாரப்பூர்வ வெய்போ அக்கவுண்டில் வெளியிட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 2022 மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

OnePlus Smartphone, Realme GT2 Master Explorer Edition, Asus ROG Phone 6 to Feature Snapdragon 8+ Gen 1 SoC

முதல் ஸ்மார்ட்போன்:

ரியல்மி GT2 மாஸ்டர் எக்ஸ்ப்ளோரர் எடிஷன் ஸ்மார்ட்போனிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. மேலும் புதிய பிளாக்‌ஷிப் பிராசஸர் கொண்டு அரிமுகம் செய்யப்படும் முதல் ஸ்மார்ட்போன் மாடலாக இது இருக்கும் என ரியல்மி குறிப்பிட்டு உள்ளது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் வெளியீடு எப்போது நடைபெறும் என்பது குறித்து எந்த தேதியையும் குறிப்பிடவில்லை.

அசுஸ்:

இரு நிறுவனங்களை தொடர்ந்து தாய்வான் நாட்டு ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான அசுஸ், தனது ரோக் போன் 6 சீரிஸ் மாடல்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என அறிவித்து இருக்கிறது. அசுஸ் ரோக் போன் 6 சீன வேரியண்ட் மற்றும் குளோபல் வேரியண்ட் என இரு மாடடல்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என அசுஸ் அறிவித்து உள்ளது. 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios