Asianet News TamilAsianet News Tamil

சத்தமின்றி உருவாகும் ஒன்பிளஸ் புது நார்டு ஸ்மார்ட்போன் - பிப்ரவரியில் வெளியீடு?

ஒன்பிளஸ் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய நார்டு CE 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

OnePlus Nord CE 2 5G launch date could be February 11th
Author
Tamil Nadu, First Published Jan 27, 2022, 6:02 PM IST

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு CE 2 ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டு வருவதாக பலமுறை இணையத்தில்  தகவல்கள் வெளியாகி வந்தது. சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போனின் குறியீடுகளும் ஒன்பிளஸ் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் காணப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் சோதனைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் இது அறிமுகம் செய்யப்படலாம் ென்றும் தகவல் வெளியாகி உள்ளது.

புதிய ஒன்பிளஸ் நார்டு CE 2 5ஜி ஸ்மார்ட்போன் பிப்ரவரி 11 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஒப்போ ரெனோ 7 SE மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வேரியண்ட் என்றும் தகவல் வெளியாகி  உள்ளது. முன்னதாக இணையத்தில் வெளியான ரெண்டர்களின் படி இரு மாடல்களின் கேமரா பம்ப் கிட்டத்தட்ட ஒரே மாதிரி காட்சியளிக்கின்றன. 

OnePlus Nord CE 2 5G launch date could be February 11th

அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் நார்டு CE 2 மாடலில் 6.4 இன்ச் AMOELD டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா  கிளாஸ் பாதுகாப்பு, மீடியாடெக் டிமென்சிட்டி 900 5ஜி பிராசஸர், 8GB ரேம், 128GB / 256GB மெமரி, ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஆக்சிஜன் ஓ.எஸ். 12 வழங்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 4500mAh பேட்டரி, 65வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 5ஜி, 4ஜி எல்.டி.இ., டூயல் சிம், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், ஜி.பி.எஸ்., என்.எப்.சி., மற்றும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க இந்த மாடலில் 64Mஜ பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP மேக்ரோ லென்ஸ், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

விலையை பொருத்தவரை புதிய ஒன்பிளஸ் நார்டு CE 2 5ஜி மாடலின் 6GB + 128GB விலை ரூ. 24 ஆயிரம்,  8GB + 256GB ரூ. 28 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பாக்கப்படுகிறது. புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கிரீன் என இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்படும் என  தெரிகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios