ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு 2 CE லைட் 5ஜி ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு 2 CE லைட் 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்துடன் புதிய நார்டு 2 CE 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய ஒன்பிளஸ் நார்டு 2 CE 5ஜி மாடலில் 6.59 இன்ச் FHD புளூயிட் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி பிராசஸர், அதிகபட்சம் 8GB ரேம், அதிகபட்சம் 256GB மெமரி வழங்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் பிரபல ஸ்மார்ட்போன் வல்லுனரான ஸ்டீவ் ஹமெமர்ஸ்டோஃபர் மூலம் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்த ஆண்டே அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

ஒன்பிளஸ் நார்டு 2 CE 5ஜி மாடலில் 6.59 இன்ச் FHD புளூயிட் டிஸ்ப்ளே, 6GB அல்லது 8GB ரேம், 128GB அல்லது 256GB மெமரி வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, இரண்டு 2MP சென்சார்கள், 16MP செல்ஃபி கேமரா வவழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 5000mAh பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படலாம்.
கடந்த மாதம் வெளியான தகவல்களின் படி ஒன்பிளஸ் 2 CE 5ஜி ஸ்மார்ட்போன் பிப்ரவரி 11 ஆம் தேதி அறிமுகமாகும் என கூறப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பற்றி ஒன்பிளஸ் தரப்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இந்த விவரங்கள் ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் சோர்ஸ் கோடில் இடம்பெற்று இருக்கிறது.
